இந்த தொடரை முழுவதும் எண்களாகவே குறிப்பிட வேண்டும். கிறிஸ் கெய்ல் தனது சொந்த மண்ணில் கடைசி ஒரு நாள் தொடரில் 39 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த 39 சிக்ஸர்களை வைத்து பார்க்கும் போது இந்த தொடர் பேட்ஸ்மேன்களுக்கு உகந்ததாக இருந்துள்ளது. அதே சமயத்தில் பௌலர்களும் இந்த தொடரில் சிறப்பாக தங்களது பணியை செய்துள்ளனர்.
இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் தொடர் 2-2 என டிரா ஆனாதால் இரு அணிகளும் தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தியுள்ளனர் என்றே கூற வேண்டும். இந்த தொடர் இரு அணிகளுக்கும் தங்களது அணியில் உள்ள சிறப்பான ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுக்க மிகவும் உதவும். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் செல்டன் கட்ரில்லா, ஓஸானே தாமஸ் போன்ற அனல் வேகப்பந்து வீச்சாளர்களையும், கிறிஸ் கெய்ல், சிம்ரான் ஹட்மைர் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஜெஸன் ராய், ஜோ ரூட், இயான் மோர்கன் மற்றும் ஜாஸ் பட்லர் போன்றோர் இந்த தொடரில் ஒவ்வொரு சதங்களை அடித்து தங்களது பேட்டிங்கை சிறப்பாக வெளிபடுத்தியுள்ளனர். பந்துவீச்சில் அடில் ரஷித் சிறப்பாக பந்துவீசியுள்ளார். ஒருநாள் தொடரில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மார்க் வுட் வேகப்பந்து வீச்சில் சிறப்பாக வீசியிருந்தாலும், இங்கிலாந்து அணியில் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் என யாரும் இல்லை.
மேற்கிந்தியத் தீவுகள் அணியாலும் போட்டி போட முடியும்
இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் சமன் செய்ததன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்களுக்கு 2019 உலகக் கோப்பையில் சிறப்பாக தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர்-1 அணியான இங்கிலாந்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி தங்களது சிறப்பான ஆட்டத்தால் தொடரை சமன் செய்துள்ளது. இதன்மூலம் உலகக் கோப்பையில் தங்களது ஆட்டத்திறனும் சிறப்பாக இருக்கும் என மற்ற அணிகளுக்கு இந்த தொடரின் மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடரின் ஆட்டநாயகன் கிறிஸ் கெய்ல் 4 போட்டிகளில் கலந்து கொண்டு 424 ரன்களை குவித்துள்ளார். இதில் 234 ரன்கள் சிக்ஸர்களிலே வந்தது குறிப்பிடத்தக்கது. கெய்லிற்கு தனது சொந்த மண் மிகவும் சாதாகமாக இருந்துள்ளது. ஹட்மைர் 1 சதமும், டேரன் பிராவோ, சை ஹோப் தலா ஒரு அரைசதமும் இந்த தொடரில் அடித்துள்ளனர்.
ஓஸானே தாமஸ் 9 விக்கெட்டுகளும், செல்டன் கட்ரில்லா மற்றும் ஜேஸன் ஹல்டர் தலா 7விக்கெட்டுகளையும் இந்த தொடரில் வீழ்த்தியுள்ளனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜாஸ் பட்லரின் விக்கெட்டை ஜேஸன் ஹோல்டர் சிறப்பாக வீழ்த்தினார். 4வது ஒருநாள் போட்டியில் கரோலஸ் பிராத்வெய்ட் 5 விக்கெட்டுகளும், அரை சதமும் விளாசி தனது ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 2019 உலகக் கோப்பையில் கிறிஸ் கெய்லுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க சிறப்பான வீரரை தேடிக்கொண்டுள்ளது. ஈவன் லிவிஸ் இதற்கு சரியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் காயம் காரணமாக இந்த தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெறவில்லை. அத்துடன் சிறப்பான சுழற்பந்து வீச்சாளரையும் தேடிவருகிறது. தேவேந்திர பீஸோ மற்றும் ஆஸ்லி நர்ஸின் சுழற்பந்து வீச்சு இந்த தொடரில் மிகவும் மோசமாக இருந்தது. சுனில் நரைன் இந்த இடத்திற்கு சரியானதாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் மோசமாக உள்ள இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய தூண்களாக ஜேஸன் ராய், ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹால்ஸ் போன்ற வீரர்கள் திகழ்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது அரைசதமாவது அடிக்கும் திறமை உடையவர்களாக உள்ளனர். இங்கிலாந்து சார்பில் இந்த தொடரில் இயான் மோர்கன் 256 ரன்கள் அடித்துள்ளார். ஜோஸ் பட்லர் 4வது ஒருநாள் போட்டியில் 76 பந்துகளுக்கு 150 ரன்களை அடித்து தனது அதிரடி ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தினார்.
இந்த தொடரில் இங்கிலாந்தின் அடில் ரஷித் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பௌலிங்கை வெளிபடுத்தியுள்ளார். முக்கியமாக 4வது ஒருநாள் போட்டியில் 5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் 419 என்ற இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அணியால் அடையச் செய்யாமல் தடுத்தார். வேகப்பந்து வீச்சை பொறுத்த வரை லியாம் பிளன்கட் 133 என்ற சராசரியுடன் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். கிறிஸ் வோக்ஸ் 68.66 என்ற சராசரியுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க் வுட் 7 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும் இந்த தொடரில் வீழ்த்தியுள்ளனர். டாம் குரானிற்கு விக்கெட் ஏதுமின்றியும், டேவிட் வில்லிக்கு இத்தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
கடந்த உலகக் கோப்பையில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. மிடில் ஓவரில் லியாம் பிளன்கட் மெதுவாகவும் சரியாகவும் மிடில் ஓவரில் வீசுவதில் வல்லவராக உள்ளார். ஒருவேளை உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஜோஃப்ரா ஆர்சரை இங்கிலாந்து அணியில் இடம்பெற செய்தால் அவரது பௌலிங் இங்கிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சில் பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.