வரும் 2022 ஆம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் இடம்பெறுவதை பரிந்துரைத்துள்ளது, காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு. எழுபத்தி ஒரு உறுப்பினர்களைக் கொண்ட காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பின் 51 சதவீதத்தினர் மகளிர் கிரிக்கெட்டை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே, 28 நாட்களுக்குள்ளாக மின்னணு முறையில் ஓட்டெடுப்பு நடத்தப்படும். ஒருவேளை அங்கீகரிக்கப்பட்டால், எட்டு போட்டிகளை உள்ளடக்கிய மகளிர் கிரிக்கெட் காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறும்.
இனிவரும் போட்டிகளில் நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கு முன்னர், 1998ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் ஒரு அங்கமாக இருந்தது. அப்போது, தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து பதக்கங்களை குவித்தன. நேற்று காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு மகளிர் கிரிக்கெட்டை பரிந்துரைத்ததை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி இது ஒரு முக்கிய மைல்கல் என்று கூறியுள்ளார்.
"உலகம் முழுதும் கிரிக்கெட் போட்டிகள் பிரபலம் அடைவதற்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாகும். இதன் மூலம், மகளிர் கிரிக்கெட் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பினை அளிக்கக் கூடும். மேலும், உலகம் முழுவதிலும் உள்ள இளம் தலைமுறையினரும் கூட கிரிக்கெட் போட்டிகளில் விளையாட துவங்குவர். கிரிக்கெட் போட்டிகளில் சேர்த்தமைக்கு பெரும் நன்றி கடன் பட்டிருக்கிறோம். என்றார், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹாரிசன்.
ஐசிசி தலைமை செயல் அதிகாரியான மானும் அளித்த பேட்டி ஒன்றில்,
"பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டை நினைத்ததை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் காமன்வெல்த் கூட்டமைப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் காமன்வெல்த் குடும்பத்தின் அங்கமாக இருப்பது மிகப்பெரிய மரியாதையாகும்"
என்றார்.
கிரிக்கெட் மட்டுமல்லாது பீச் வாலிபால் மற்றும் பாரா டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இனி வரும் காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவரை இடம்பெற்று வந்த வில்வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இனி இடம்பெற மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.உலகின் மிகப்பெரிய போட்டிகளான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. அதன் பின்னர், 10 ஆண்டுகள் கழித்து காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் லண்டனில் இறுதி வரைவை அரசாங்கத்திடம் இருந்து போட்டிகளில் நடத்துபவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மகளிர் கிரிக்கெட்டை அங்கீகரிப்பது போலவே ஆடவர் கிரிக்கெட்டையும் காமன்வெல்த் போட்டிகளில் அங்கீகரித்தால் ரசிகர்களின் நீண்ட கால கனவு நனவாகும் இதுபோலவே ஒலிம்பிக் போட்டிகளிலும் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுவது ரசிகர்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது எனவே இதுவும் ஒரு நாள் நிச்சயம் கைகூடும் என எதிர்பார்க்கலாம்.