உலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3!!

Sri Lanka Team
Sri Lanka Team

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.

#1) இலங்கை Vs பங்களாதேஷ் ( 2003 ஆம் ஆண்டு )

பங்களாதேஷ் – 124/10 ( 31.1/50 ஓவர்கள் )

இலங்கை – 126/0 ( 21.1/50 ஓவர்கள் )

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், பங்களாதேஷ் அணியும், இலங்கை அணியும் மோதியது. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹனான் சர்கார் மற்றும் சஹாரியர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த முகமது அஸ்ரபுல், முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

மிடில் ஆர்டரில் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய அலோக் கபாலி, 32 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 31 ஓவர்களின் முடிவில் பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 124 ரன்கள் மட்டுமே அடித்தது. இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜமீந்தா வாஸ், 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

Chaminda Vaas
Chaminda Vaas

125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஜெயசூர்யா மற்றும் அதாப்பட்டு ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே தங்களது விக்கெட்டை பறிகொடுக்காமல் சிறப்பாக விளையாடி, இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர். அதாப்பட்டு 69 ரன்களும், ஜெயசூர்யா 55 ரன்களும் அடித்தார். இந்தப் போட்டியில் ஜமீந்தா வாஸ், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

#2) தென் ஆப்பிரிக்கா Vs பங்களாதேஷ் ( 2003 ஆம் ஆண்டு )

பங்களாதேஷ் – 108/10 ( 35.1/50 ஓவர்கள் )

தென் ஆப்பிரிக்கா – 109/0 ( 12/50 ஓவர்கள் )

South Africa Team
South Africa Team

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், பங்களாதேஷ் அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதியது. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சஹாரியர் மற்றும் ஈஷானுள் ஹக் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த முகமது அஸ்ரபுல், வெறும் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று விளையாடிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் மஸ்குட், 29 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 35 ஓவர்களின் முடிவில் பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Herschelle Gibbs
Herschelle Gibbs

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. கிப்ஸ் மற்றும் கிறிஸ்டன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடியாக விளையாடினர். எனவே தென் ஆப்பிரிக்கா அணி 12 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிப்ஸ் 49 ரன்களும், கிறிஸ்டன் 52 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Quick Links