உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த 12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலக கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள கிரிக்கெட் அணிகள், அங்கு பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நடந்தது என்ன ?
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் புல்வாமா தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிதி கம்பீரை விமர்சனம் செய்துள்ளார். இந்த புகழ் மிக்க இரண்டு கிரிக்கெட் வீரர்களும் சில நாட்களாக வார்த்தையினால் போர் செய்துக் கொண்டு இருப்பது நம் அனைவருக்கும் தெரியும் என்பதில் சந்தேகமில்லை.
கதைக்கரு
கவுதம் கம்பீர் ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர். இவர் இந்தியன் பிரீமியர்( ஐபிஎல்) லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி டேர்டெவில்ஸ் கேப்டன் ஆவார். இவர் ஒரு இடது கை தொடக்க பேட்ஸ்மேன். 2011 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதற்கு இவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தவர். இவர் தற்போது கிரிக்கெட்டில் ஒய்வு பெற்றார். ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர் அரசியலில் இறங்கினார். இது ரசிகர்களிடம் பெரும் அதிரிச்சியை ஏற்படுதியது. இவர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) யில் இணைந்தார். அதுமட்டுமல்லாமல் பாஜக சார்பில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கிரக்கெட் மற்றும் அரசியில் இரண்டிலும் வெற்றி பெற்பெற்றார்.
2019 பிப்ரவரி 14 ஆம் நாள் இந்திய ராணுவ வீரர்கள் சென்று கொண்டு இருந்த வாகனங்கள் மீது பயங்கரவாத கும்பல் தாக்கின. இந்த புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் பாகிஸ்தான் என்பது தெரியவந்தது.இதனால் ஆத்திரம் அடைந்த கவுதம் கம்பீர் பேட்டி ஒன்று அளித்தார். "அதில் இந்திய அணி இனிமேல் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாட கூடாது என்று தெரிவித்தார். இதுக் குறித்து இவர் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இறுதிப் போட்டியாக இருந்தாலும் கூட இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கவுதம் காம்பீரின் இந்தப் பேட்டி குறித்து பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிதியிடம், செய்தியாளர் ஒருவர் கேட்டார். கவுதம் மற்றும் அப்ரிதி இவர்கள் இவருக்கும் முன்பகை இருப்பது நாம் அறிந்திருப்போம். கவுதம் கம்பீரின் பேட்டி பாகிஸ்தான் வீரர்கள் அனைவர்க்கும் கோபம் ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த அப்ரிதி, ’’காம்பீர், இதுபோன்று பேசும்போது தனது புத்தியை பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறீர்களா? படித்தவர்கள் இப்படி பேசுவார்களா?’’ என்று கேட்டுள்ளார்.
அடுத்தது என்ன ?
முன்னாள் கிரிக்கெட் வீரராகிய கவுதம் கம்பீர் மற்றும் பாக்கிஸ்தான் வீரராகிய ஷாகித் அப்ரிதி இவர்களுகிடையே உள்ள பகை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுல்ல தற்போது நடக்க உள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கும் பாக்கிஸ்தான் அணிக்கும் மிகுந்த போட்டியாக அமையும். இந்த முறை இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும்.