உலகின் தலைசிறந்த பவுலர்கள் யாராக இருந்தாலும் அவர்களது பந்தை அடித்து துவம்சம் செய்யும் ஓரிரு பேட்ஸ்மேன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வளவு ஏன் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே. சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீச சற்று பயமாகத்தான் இருக்கிறது என்று அவரே கூறியிருக்கிறார். இவ்வாறு தலைசிறந்த பவுலர்கள் பற்றியும் அவர்கள் பந்துவீச அஞ்சும் பேட்ஸ்மேன்களை பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
#1) டேல் ஸ்டைன் – சேவாக்
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த டேல் ஸ்டைன். டெஸ்ட் போட்டியில் தலைசிறந்த பவுலர்களின் பட்டியலில் தொடர்ந்து 263 வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான். எதிரணியின் தொடக்க ஆட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக பந்து வீசும் திறமை படைத்தவர் டேல் ஸ்டெய்ன். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 671 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவ்வாறு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார் டேல் ஸ்டெய்ன்.
ஆனால் இவரே பந்து வீச அஞ்சும் ஒரு ஆட்டக்காரர் உண்டு. அவர் தான் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக். சேவாக் பற்றி ஸ்டெய்ன் கூறியதாவது, "நாம் சரியான லென்த்தில் பந்து வீசவில்லை என்றால் கருனையே இன்றி நம்முடைய பந்துகளை எல்லைக்கோட்டிற்கு பறக்கவிடுவார். அவர் அடிக்க ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு எளிதில் அவரை கட்டுபடுத்த முடியாது. அவர் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கக்கூடியவர்" என்றும் கூறுகிறார் டேல் ஸ்டெய்ன்.
#2) ஜேம்ஸ் ஆன்டர்சன் – ஹாசிம் அம்லா
இவர் உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மட்டுமின்றி சிறந்த ஸ்விங் பவுலரும் கூட. டெஸ்ட் போட்டிகளில் டாப் விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 565 விக்கெட்டுகளுடன் 4 வது இடத்தில் இருக்கும் ஜேம்ஸ் ஆன்டர்சன், 36 வயதிலும் இங்கிலாந்து அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எல்லாம் வீழ்த்தியுள்ள ஆன்டர்சனை அச்சுறுத்தும் ஆட்டக்காரர்களும் உள்ளனர். அவர்கள் வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பான்டிங்கும் தென்னாப்பிரிக்காவின் ஹசிம் அம்லாவும் தான். ஹசிம் அம்லாவுக்கும் ரிக்கி பான்டிங்கிற்கும் பந்து வீசுவது சிரமம் என்று கூறிய ஜேம்ஸ் ஆன்டர்சன், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் எந்த லென்த்தில் எந்த வேகத்தில் போட்டாலும் அதை தடுத்து ஆடுபவர் ரிக்கி பான்டிங் என்றும் கூறுகிறார்.
#3) ரபாடா – விராட் கோஹ்லி
ரபாடா தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர். 19 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். குறுகிய வயதிலேயே அதிக அனுபவம் பெற்ற பவுலராக மாறிவிட்டார். இவர் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த 32 டெஸ்ட் போட்டிகளில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மிகக் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆனால் இவரே பந்துவீச அஞ்சும் ஒரு பேட்ஸ்மேன் இருக்கிறார். அவர் தான் நம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. விராட் கோலி குறித்து அவர் கூறியதாவது" மற்ற பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவதை விட விராட் கோலிக்கு பந்துவீச சற்று சிரமமாகத்தான் இருக்கிறது" என்று கூறினார்.