இன்று தொடங்கியிருக்கும் மெகா கிரிக்கெட் தொடரான இந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை பதிப்பானது அனைத்து தரப்பு வீரர்ர்களுக்கும் கடும் சவாலளிக்கும் போட்டிகளில் ஒன்றாகும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, இங்கிலாந்து மைதானங்களில் 300-க்கும் மேற்பட்ட ரன்களே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே , ஒரு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றுவது பவுலர்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகின்றது. இங்கு இந்த ஆண்டு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த எதிர்பார்க்கப்படும் மூன்று பவுலர்களை பற்றி காணலாம்.
#1. ஜஸ்பிரித் பும்ரா:
இந்திய அணியின் பௌலிங் சூப்பர்ஸ்டாராக உள்ள இளம் வீரர் ஜஸ்பிரித் பும்ரா, உலகக் கிரிக்கெட்டில் தனது அற்புதமான பந்துவீச்சின் மூலம் எதிர் அணியினரை திணறடித்து வருகிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இவர், இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சிறந்த ஐ.பி.எல் சீசனை விளையாடித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியானது நான்காவது முறையாக தொடரைக் கைப்பற்றியது.
இந்த உலகக் கோப்பையில் அவர் நல்ல நிலையை தொடர்ந்தால், இந்த போட்டிகயின் மிக அதிக விக்கெட் டேக்கராக திகழ இயலும். தேவையான திறமைகள் மற்றும் திறன்களைக் கொண்டுள்ள இவர், எந்த ஒரு சூழ்நிலைகளிலும் சரியாக பந்துவீச கூடியவர் . இது கிரிக்கெட் விளையாட்டின் இக்கட்டான சூழ்நிலைகளில் மிக அவசியமானதாக உள்ளது. இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் முக்கிய துருப்புச்சீட்டாக இவர் விளங்குவார் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை.
#2. ரஷித் கான்:

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான், இந்த ஆண்டு உலகக் கோப்பையில் அதிகபட்ச ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஸ்பின்னர்களுள் ஒருவர். மேலும் , சர்வதேச போட்டிகளில் எந்த ஒரு சூழ்நிலைகளிலும் விக்கெடுகளை எடுத்து தன் திறமையை நிரூபித்து வருகின்ற ஒரு இளம் வீரர்.இவர் பங்களிப்பு அந்த அணிக்கு மிகுந்த பலமாக அமைவதுடன் மற்ற அணிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரஷித் கான் பெரிய அளவிற்கு ஜொலிக்கவில்லை என்றாலும், அவர் ஆப்கானிஸ்தானுக்கு என்றும் விக்கெட் எடுத்துக் கொடுக்ககும் நம்பிக்கையான பந்து வீச்சாளர் ஆவார். ஒவ்வொரு அணியும் ரஷித் கானை ஒரு சவாலாக கருதுவதுடன், அவரை சமாளிப்பதற்கான வழிகளையும் திட்டமிட்டு வருகின்றனர். எதுவாக இருப்பினும், ரசித் கான் உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்துக் கொடுத்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக கண்டிப்பாக இடம்பெறுவார் என உறுதியாக கூறலாம்.
#3.ககிசோ ரபாடா:

பும்ராவைப் போலவே, ரபாடாவும் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் தன்னுடைய பெயரை நிலைநாட்டியுள்ளார். மேலும், இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் முக்கிய துறுப்புச்சீட்டாக உள்ளார்.ரபாடா 2019 ஐபிஎல் சீசனில் , தற்போதய டெல்லி கேப்பிட்டஸ் அணிக்காக விளையாடி 12 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை எடுத்தார், இது அந்த அணிக்கு 2012க்கு பிறகு முதல் தடவையாக நாக் அவுட் சுற்றிற்கு முன்னேற உதவியது.
தென் ஆப்ரிக்கா அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக உள்ள இவர், எந்த ஒரு இக்கட்டாண சூழ்நிலைகளில் விக்கெட் எடுப்பதற்கான திறனைக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, இங்கிலாந்தின் சூழ்நிலைகளை நன்கு கையாளக்கூடிய இவரது பந்துவீச்சு மிகவும் நன்றாகவே உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான டேல் ஸ்டெய்ன் மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோருடன் இணைந்து நிச்சயம் ஒரு நல்ல தொடரை ரபாடா உருவாக்குவார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியைப்போலவே உலக கோப்பையிலும் சிறந்த பவுலராக விளங்குவார் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.
