கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய திருவிழாவான உலகக் கோப்பை தொடர் இன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் தொடராக இது திகழ்கிறது.
கடைசியாக நடந்த உலகக் தொடருக்கும் தற்போது நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. 2015 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. கடந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் மோதின. தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் அரையிறுதியில் வெளியேறின. முதன் முதலாக உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது.
2015 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இங்கிலாந்து உலகின் நம்பர் 1 ஓடிஐ அணியாக வலம் வருகிறது. சிறப்பான பேட்டிங் லைன-அப், பவர் ஹீட்டர்கள் மற்றும் 7வதாக களமிறங்கும் வீரர் கூட சதம் விளாசும் அளவிற்கு அந்த அணி வலிமையாக திகழ்கிறது. கடைசியாக நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி 300க்கும் மேல் அல்லது 400 ரன்களை எந்த அணிக்கு எதிராகவும் விளாசும் வலிமை வாய்ந்ததாக உள்ளது. அத்துடன் தனது சொந்த மண்ணிலும் சரி அந்நிய மண்ணிலும் சரி இங்கிலாந்தின் ஆட்டத்திறன் சிறப்பாக உள்ளது.
தென்னாப்பிரிக்க அணி பேப்பரில் மட்டுமே வலிமையான அணியாக உள்ளது. சமீபத்தில் அந்த அணியிலிருந்து ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றப்பின் அந்த அணியின் பேட்டிங் மோசமடைந்து உள்ளது. இந்தியாவிற்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடந்த போட்டியில் 6-1 என ஒருநாள் தொடரை இழந்தது.
இருப்பினும் தென்னாப்பிரிக்க அணி சமீபத்தில் நடந்த இரு வெளிநாட்டு தொடர்களான இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய ஒருநாள் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கைப்பற்றியது. அத்துடன் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக் கோப்பை சவாலிற்கு தயார் என உலகிற்கு அறிவித்துள்ளது.
இருப்பினும் உலகக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தடுமாற வாய்ப்புள்ளது. நாம் இங்கு இங்கிலாந்திற்கு எதிராக தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ள உள்ள 3 சவால்கள் குறித்து காண்போம்.
#1 இங்கிலாந்து பேட்டிங்
இங்கிலாந்து அணி மிகவும் வலிமையான பேட்டிங் வரிசையில் தன்வசம் வைத்துள்ளது. ஜெஸன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், இயான் மோர்கன் ஆகியோர் இங்கிலாந்தின் மிக வலிமையான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் கடைநிலை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். இவர்களுடன் அடில் ரஷீத் மற்றும் கிறிஸ் வோக்ஸும் சிறப்பான ஆட்டத்தை இக்கட்டான சூழ்நிலையில் வெளிபடுத்துவார்கள்.
மேலே குறிப்பிட்ட வீரர்கள் இங்கிலாந்து மைதானத்தில் சிறப்பான ரன்களை குவிப்பதில் வல்லவர்கள். இவர்களது அதிரடி பேட்டிங் மூலம் அதிக ரன்களை ஒருநாள் போட்டிகளில் குவித்து சாதனை படைத்தாளும் ஆச்சரியப்படுவதிற்கு இல்லை.
தென்னாப்பிரிக்க அணிக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்கும். காயம் காரணமாக முதல் போட்டியிலிருந்து விலகிய அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இல்லாமல் தென்னாப்பிரிக்கா களமிறங்க உள்ளது. இருப்பினும் தென்னாப்பிரிக்கா லுங்கி நிகிடி மற்றும் காகிஸோ ராபாடா அகிய இரு வலிமையான வேகப்பந்து வீச்சாளர்களை கடந்த இரு வருடங்களில் உற்பத்தி செய்துள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்ற அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் என தென்னாப்பிரிக்க அணியில் யாரும் இல்லை.
இம்ரான் தாஹீருக்கு இது மூன்றாவது உலகக் கோப்பை தொடராகும். கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மோர்னே மோர்கல் மற்றும் காயம் காரணமாக விலகிய டேல் ஸ்டெய்ன் ஆகிய அனுபவ பந்து வீச்சாளர்கள் இல்லை என்றாலும், இம்ரான் தாஹீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2 இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்
சமீப காலமாக தென்னாப்பிரிக்க அணியில் வலிமையான சுழற்பந்து வீச்சாளர்கள் என யாரும் இல்லை. கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் இனைந்து 33 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அடில் ரஷித் மற்றும் மொய்ன் அலி ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளது. ஜோ ரூட் ஒரு பகுதி நேர பந்துவீச்சாளராக பந்துவீச்சை மேற்கொள்ள உள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை ஜோ ரூட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மிடில் ஆர்டரில் சுழற்பந்து வீச்சை சரியாக எதிர்கொள்ளும் பொறுப்பு கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸி, ஜேபி டுமினி, டேவிட் மில்லர் ஆகியோரைச் சேரும். டாப் 3 பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்றால் அவர்கள் சுழற்பந்து வீச்சை சரியாக எதிர்கொள்ள வேண்டும்.
இங்கிலாந்து அணி ஓவர் மைதானத்தில் கடைசியாக விளையாடிய போட்டியில் 4 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி உள்ளனர். எனவே இந்த மைதானத்தில் நடக்கவிருக்கும் முதல் தகுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சற்று நிதானமாக பேட்டிங் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3 ஆடுகள தன்மை
லண்டனில் பருவ சூழ்நிலை மே 30 அன்று அதிக மேகமூட்டத்துடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மழை பொழிய அதிக வாய்ப்புள்ளது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கடின மைதானத்தில் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என பயிற்சி மேற்கொண்டிருப்பர். அத்துடன் ஈரப்பதமான ஆடுகளத்திலும் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளின் முதல் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்த போட்டி நடைபெற்று இருந்தால், 2013 சேம்பியன் டிராபியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டம் போல அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
உலகக் கோப்பை தொடர் எப்பொழுதுமே தென்னாப்பிரிக்க அணிக்கு சிறப்பாக அமைந்தது இல்லை. கடைசியாக. 7 உலக கோப்பை தொடர்களில் ஒரு முறை கூட தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற காரணிகளாக 1992 மற்றும் 2003 உலகக் கோப்பை தொடரில் மழை தென்னாப்பிரிக்க அணியின் ஆட்டத்தில் விளையாடியது.
இந்த மைதானத்தில் நடந்த உலகக் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளின் சிறப்பான பந்துவீச்சினால் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் 200 ரன்களை தாண்டவில்லை. பெரும்பாலும் டாஸ் வெல்லும் அணி பௌலிங் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.
தென்னாப்பிரிக்க அணி அனைத்திற்கும் முன்கூட்டியே திட்டம் வகுத்து வைத்திருக்கும். இருப்பினும் ஆடுகள தன்மை மாறினால் எந்த அணியாக இருந்தாலும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த சிரமப்படும்.