2019 உலகக் கோப்பை தொடரின் மிகப்பெரிய போட்டி ஒன்று ஜீன் 9 அன்று ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஐந்து முறை உலகக் கோப்பை சேம்பியன் ஆஸ்திரேலிய அணியும், இரண்டு முறை சேம்பியனான இந்திய அணியும் மோத உள்ளன.
இரு அணிகளுமே இவ்வருட உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக தொடங்கியுள்ளது. முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி கடந்த புதன் அன்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டியாக பார்க்கப்படுகிறது. பேட்டிங் அணி சற்று தடுமாற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. பௌலர்களுக்கு இப்போட்டி சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது.
இந்த மிகப்பெரிய போட்டியில் 3 முக்கிய காரணிகள் போட்டியின் முடிவை தீர்மாணிக்கும். இந்திய-ஆஸ்திரேலிய போட்டியில் போட்டியை மாற்றியமைக்கும் மற்றும் தீர்மாணிக்கும் வீரர்கள் மற்றும் காரணிகளை பற்றி காண்போம்.
#1 மிட்செல் ஸ்டார்கிற்கு எதிராக இந்திய அணியின் டாப் ஆர்டர்
சமீப காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய வலிமையாக அதன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, ஷீகார் தவான், விராட் கோலி திகழ்கின்றனர். இவர்கள் மூன்று பேருமே அதிக ரன்களை பேட்டிங்கில் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதில் வல்லவர்கள்.
ஆனால் கடந்த சில போட்டியில் இவர்கள் மூன்று பேரும் தடுமாற்றத்தை சந்தித்து குறைவான ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறுகின்றனர். இது இந்திய அணிக்கு பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்கிற்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நிற்பது சற்று சந்தேகத்தை அனைவரது மனதிலும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்குகிறார். அத்துடன் ஆஸ்திரேலிய பௌலிங் முழுவதும் தற்போது சிறந்த மாற்றத்துடன் தென்படுகிறது.
போட்டியின் ஆரம்பத்தில் ரோகித் சர்மா இடது கை ஸ்விங் பௌலிங்கை சரியாக எதிர்கொள்ள மாட்டார். விராட் கோலியும் இடதுகை வேகப்பந்து வீச்சை அவ்வளவாக எதிர்கொள்ள மாட்டார். இவர்கள் இருவரும் கடந்த காலங்களில் இடதுகை ஸ்விங் பௌலிங்கில் கடுமையாக சொதப்பி தங்களது விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
இந்த காரணி கண்டிப்பாக உலகக் கோப்பை போட்டியில் வெளிபடும் என தெரிகிறது
#2 டேவிட் வார்னர் vs ஜாஸ்பிரிட் பூம்ரா
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என இரு அணிகளுமே வலிமையான பந்துவீச்சை கொண்ட அணிகள் தான். இரு அணி பௌலர்களில் எந்த அணி பௌலர்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்துகிறார்கள் என்பதற்கான ஒரு தேர்வு போல் இப்போட்டி அமையும்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வருட தடைக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ள டேவிட் வார்னர் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் மற்றும் இடற்பாடுகள் சந்திப்பது விளையாடினார். இருப்பினும் சிறிது ஆட்டத்திற்கு பிறகு நன்றாக செட் செய்து மிடில் ஓவரில் ரன்களை குவித்து அரைசதம் விளாசினார்.
டேவிட் வார்னர் உலகின் சிறந்த ஓடிஐ பௌலருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஜாஸ்பிரிட் பூம்ரா மிக்க சுதந்திரமாக தனது பந்துவீச்சை மேற்கொள்கின்றனர். அத்துடன் ஐபிஎல் தொடரில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தனது அதிரடி பந்துவீச்சை சிறப்பாக வெளிப்படுத்தி வீழ்த்தியுள்ளார். எனவே அதே ஆட்டத்தை உலகக் கோப்பை தொடரிலும் தொடருவார் என தெரிகிறது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடந்த போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் குவின்டன் டிகாக்கிற்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு தடுமாறச் செய்துள்ளார் பூம்ரா. எனவே இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் போட்டியில் டேவிட் வார்னருக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும். மோசமாக விக்கெட் இழந்து வெளியேறுவாரா அல்லது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
உலகக் கோப்பையில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
#3 பேட் கமின்ஸின் டெத் ஓவரில் ஹர்திக் பாண்டியா மற்றும் எம்.எஸ்.தோனியின் பேட்டிங்
2019 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய வலிமையாக திகழுவது டெத் ஓவரில் ஹர்திக் பாண்டியா மற்றும் மகேந்திர சிங் தோனியின் பவர் ஹீட்டிங் ஷாட்கள் தான். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி இந்த இடத்தில் தான் மிகவும் வலிமை குறைந்ததாக காணப்பட்டது.
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தினை சரியாக எடுத்து சென்று நிலைத்து விளையாடினால் கடைநிலையில் மகேந்திர சிங் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது பவர் ஹீட்டிங் ஷாட்கள் மூலம் இந்திய அணியின் ரன்களை உயர்த்த தொடங்கி விடுவர். இரு இந்திய பேட்ஸ்மேன்களுமே சிறந்த ஆட்டத்திறனுடன் தற்போது திகழ்கின்றனர். அத்துடன் இந்திய அணியின் அரணாகவும் உள்ளனர்.
ஆஸ்திரேலிய இதனை நன்கு அறிந்திருக்கும். பேட் கமின்ஸ் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அதிவேக யார்க்கர் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ஷார்ட் பிட்ச் பந்துவீச்சை சிறப்பாக மேற்கொள்ளும் திறமை உடையவர்.
இந்திய அணி சிறந்த பவர் ஹீட்டிங் பேட்ஸ்மேன்களை கடைநிலையில் வைத்திருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், டெத் ஓவரில் பந்துவீச பேட் கமின்ஸை தேர்வு செய்வாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இரு பவர் ஹீட்டிங் இந்திய பேட்ஸ்மேன்களில் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை கடைநிலையில் வெளிபடுத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதில் வல்லவர்.
ஒட்டுமொத்தமாக சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் வீரர்களை உள்ளடக்கிய இரு அணிகள் உலகக் கோப்பை தொடரில் ஜுன் 9 அன்று மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.