#3 பேட் கமின்ஸின் டெத் ஓவரில் ஹர்திக் பாண்டியா மற்றும் எம்.எஸ்.தோனியின் பேட்டிங்
2019 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய வலிமையாக திகழுவது டெத் ஓவரில் ஹர்திக் பாண்டியா மற்றும் மகேந்திர சிங் தோனியின் பவர் ஹீட்டிங் ஷாட்கள் தான். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி இந்த இடத்தில் தான் மிகவும் வலிமை குறைந்ததாக காணப்பட்டது.
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தினை சரியாக எடுத்து சென்று நிலைத்து விளையாடினால் கடைநிலையில் மகேந்திர சிங் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது பவர் ஹீட்டிங் ஷாட்கள் மூலம் இந்திய அணியின் ரன்களை உயர்த்த தொடங்கி விடுவர். இரு இந்திய பேட்ஸ்மேன்களுமே சிறந்த ஆட்டத்திறனுடன் தற்போது திகழ்கின்றனர். அத்துடன் இந்திய அணியின் அரணாகவும் உள்ளனர்.
ஆஸ்திரேலிய இதனை நன்கு அறிந்திருக்கும். பேட் கமின்ஸ் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அதிவேக யார்க்கர் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ஷார்ட் பிட்ச் பந்துவீச்சை சிறப்பாக மேற்கொள்ளும் திறமை உடையவர்.
இந்திய அணி சிறந்த பவர் ஹீட்டிங் பேட்ஸ்மேன்களை கடைநிலையில் வைத்திருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், டெத் ஓவரில் பந்துவீச பேட் கமின்ஸை தேர்வு செய்வாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இரு பவர் ஹீட்டிங் இந்திய பேட்ஸ்மேன்களில் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை கடைநிலையில் வெளிபடுத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதில் வல்லவர்.
ஒட்டுமொத்தமாக சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் வீரர்களை உள்ளடக்கிய இரு அணிகள் உலகக் கோப்பை தொடரில் ஜுன் 9 அன்று மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.