2019 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்த 3 காரணிகள்

Indian cricket Team
Indian cricket Team

ஐசிசி உலகக் கோப்பை ஆரம்பமானதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பௌல் மைதானத்தில் எதிர்கொண்டது.

இருப்பினும் இவ்வளவு நாள் காத்திருப்பு ஒரு சரியான பலனையே அளித்துள்ளது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை விட இந்தியாவின் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றும் சிறப்பாக இருந்ததது. இந்திய அணியின் சிறப்பான ஆல்-ரவுண்டர் திறனால் ஃபேப் டுயுபிளஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கு இவ்வருட உலகக் கோப்பையில் மூன்றாவது தொடர் தோல்வியை அளிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான வேகத்திலும், சுழற்பந்து வீச்சு இரட்டையர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் மிடில் ஓவரில் ஒரு நல்ல கட்டுபாட்டையும் இந்த போட்டியில் வெளிபடுத்தினர். பேட்டிங்கில் பொறுத்தவரை ரோகித் சர்மா இறுதி வரை நிலைத்து நின்று இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இவருக்கு கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ரோகித் சர்மாவுடன் இனைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய அணியின் அருமையான இந்த வெற்றியில் அந்த அணி வெற்றி பெற 3 காரணிகள் உதவியாக இருந்தது. அதைப்பற்றி நாம் இங்கு காண்போம்.

#3 ஜஸ்பிரிட் பூம்ரா, யுஜ்வேந்திர சகால் ஆகியோரின் சிறப்பான பௌலிங்

Jasprit Bumrah, Yuzvendra chahal
Jasprit Bumrah, Yuzvendra chahal

தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் இந்த முடிவு அவருக்கு சாதகமாக இல்லை. ஆட்டத்தின் தொடக்கத்திலே அந்த அணி இரு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்தது. பூம்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சினை அவர்களால் சரியாக எதிர்கொள்ள இயலவில்லை.

பூம்ரா முதல் சில ஓவர்களில் டிக்காகிற்கு சற்று ஸ்டம்ப் லைனிற்கு பக்கவாட்டில் வீசி வந்தார். புவனேஸ்வர் குமாரும் தனது வேகத்தின் மூலம் ஹாசிம் அம்லாவிற்கு நெருக்கடியை அளித்தார். வலதுகை பேட்ஸ்மேன் அம்லா 4வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தை பேட் கொண்டு மெதுவாக தொட அது பின்னால் இருந்த ரோகித் சர்மாவிடம் கேட்சாக மாறியது.

பூம்ரா ஒரு நல்ல லென்தில் தொடர்ந்து பௌலிங் செய்து கொண்டிருந்த காரணத்தால் ரன்கள் அதிகம் போகாமல் கட்டுப்படுத்தினார். பூம்ரா தனது 3வது ஓவரை வீச வரும்போது, மிகவும் அதிக வேகத்தில், சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் டிகாக்கிற்கு வீசினார். அதை சரியாக எதிர்கொள்ளாமல் பேட் கொண்டு தட்டிய போது பந்து 3வது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கேப்டன் விராட் கோலியிடம் கேட்ச் ஆனது.வேகப்பந்து வீச்சை தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களால் சரியாக எதிர்கொள்ள முடியாத காரணத்தால் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்திலே வெளியேற்றப்பட்டனர். இதனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முன்னதாகவே களம் காண நேரிட்டது.

ஃபேப் டுயுபிளஸ்ஸி மற்றும் வென் டேர் துஸன் ஆகியோரின் நிதான ஆட்டத்தை கையாண்டு ஒரு நல்ல பார்ட்னர் ஷிப் உருவாக்கி கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடத் தொடங்கினர். 2018ல் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்ட யுஜ்வேந்திர சகாலை விராட் கோலி பௌலிங் செய்ய அழைத்து வந்தார்.

பூம்ராவைப் போலவே, யுஜ்வேந்திர சகாலும் தனது இரண்டாவது ஓவரில் விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் அதே ஓவரில் மற்றொரு விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சியை அளித்தார். இரு நிலையான பேட்ஸ்மேன்களும் சகாலின் சுழற்பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினர். 28வயதான சகால் சிறப்பான சுழலை வீசி ஸ்டம்ப் பெய்ஸை தகர்த்தெறிந்தார்.

டாப் ஆர்டர் சொதப்பிய காரணத்தால் தென்னாப்பிரிக்க அணியால் மீண்டும் எள முடியவில்லை. சகால் மிடில் ஓவரிலும் சிறப்பான பௌலிங்கை மேற்கொண்டார். இறுதியாக 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

#2 விராட் கோலியின் சிறப்பான கேப்டன்ஷீப்

Virat kholi
Virat kholi

விராட் கோலி கேப்டனாக முதன் முதலாக உலகக்கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளார். இது முதல் போட்டியில் இவருக்கு ஒரு சவாலானதாக இருக்கும் என ரசிகர்கள் நம்பினர். விராட் கோலி தனது விளையாட்டை பேரார்வத்தோடு சிறப்பாக கையாளுவார் என்பது அனைவருக்கும் தெரியும். விராட் கோலியின் ஆர்வம் மற்றும் உற்சாகம் முழுவதும் வேறு மாதிரியாக உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்தது. தனது சக இந்திய வீரர்களுடன் இனைந்து கலந்துரையாடி சிறப்பான கேப்டன் ஷீப்பை விராட் கோலி அளித்தார்.

விராட் கோலியின் அதிரடி கேப்டன் ஷீப்பாக, பவர் பிளேவில் 3 ஸ்லிப்கள் நிறுத்தியது ஒரு தந்திரமான செயலாகும். பூம்ரா பந்துவீச்சில் டிகாக் தடுமாறுவதை உணர்ந்த கோலி அவரே 3வது ஸ்லிப்பின் கவர் திசையில் சென்று நின்றார். டிகாக் மேன்மேலும் தடுமாறி வந்தார். பின்னர் பூம்ரா வீசிய ஓவரில் டிகாக் பேட் கொண்டு மெதுவாக தட்டிவிட விராட் கோலி எதிர்பார்த்த படியே அவரிடமே கேட்சாக மாறியது. பவர் பிளே முடிந்த பிறகு விராட் கோலி வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என மாறி மாறி வீச வைத்தார். குல்தீப் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் பேட்ஸ்மேன்களுக்கு அதிக இடர்பாடுகளை ஏற்படுத்தினர்.

பின்னர் யுஜ்வேந்திர சகாலை விராட் கோலி பந்துவீச செய்தார். குல்தீப் யாதவ் மற்றும் சகால் இருவரும் மிடில் ஓவரில் சிறப்பான சுழலை மேற்கொண்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தென்னாப்பிரிக்க கடைநிலை பேட்ஸ்மேன்கள் சற்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்ற போது பூம்ராவை மீண்டும் பந்துவீச கோலி அழைத்து வந்தார். அவரும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு ரன்கள் உயர்வதை கட்டுபடுத்தினார்.

விராட் கோலியின் கேப்டன்ஷீப் சரியில்லை என்று அதிக விவாதத்திற்கு கடந்த காலங்களில் உள்ளாக்கப்பட்டிருந்தது. தற்போது கோலி தனது கேப்டன் ஷீப் திறனை அதிகம் மேம்படுத்தி புத்தம் புது பொலிவுடன் உலகக் கோப்பை தொடரின் இந்தியாவின் முதல் போட்டியிலேயே சிறப்பாக வெளிபடுத்தியுள்ளார். சரியான முடிவுகளை எடுப்பதனையும் சிறப்பாக கையாண்டுள்ளார். இதன் மூலமே தென்னாப்பிரிக்க அணியை சுமாரன ரன் இலக்கில் இந்தியா வீழ்த்தியது.

#1 ரோகித் சர்மாவின் பொறுப்பான சதம்

Rohit Sharma
Rohit Sharma

ஆரம்பத்தில் இந்திய அணியின் ரன்கள் மிகவும் குறைவாகவே இருந்தது. கிறிஸ் மோரிஸ் மற்றும் காகிஸோ ரபாடா அதிரடி பந்துவீச்சை மேற்கொண்டனர். இரண்டு பந்துவீச்சாளர்களும் ஆடுகள தன்மைகேற்றவாறு பந்துவீச்சை மேற்கொண்டு ரன்களை கட்டுப்படுத்தினர். அத்துடன் 3வது ஓவரில் ரபாடா, தவானின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணி பவர் பிளேவில் 34 ரன்களை மட்டுமே அடித்தது.

பின்னர் களமிறங்கிய விராட் கோலியும் ஆன்டில் பெலுக்வாயோ வீசிய பந்தில் டிகாக்கிடம் கேட்ச் ஆனார். இதனால் இந்திய ரசிகர்கள் சற்று சோகமடைந்தனர். இந்திய துனைக் கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பான மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த ஆரம்பித்தார். தனது முழு அனுபவத்தையும் இந்த போட்டியில் வெளிபடுத்தினார். ரோகித் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை கணித்து விளையாடி 3வது விக்கெட்டிற்கு கே.எல்.ராகுலுடன் இனைந்து 85 ரன்களை குவித்தனர்.

ஆட்டத்தின் தன்மைக்கேற்றவாறு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார் ரோகித். உலகின் நம்பர் 2 ஓடிஐ பேட்ஸ்மேன், சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார், அத்துடன் சில சில பவுண்டரிகளை அவ்வப்போது தட்டிவிட்டார். கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய பிறகு, ரோகித் சர்மா, மகேந்திர சிங் தோனியுடன் இனைந்து 4வது விக்கெட் பார்ட்னர் ஷிப்பிற்கு 74 ரன்களை விளாசினர். இந்த பார்டனர் ஷீப் மூலம் இந்தியா வசம் வெற்றி வாய்ப்பு மாறியது.

ரோகித் சர்மா தனது 23வது ஓடிஐ சதத்தை விளாசினார். உலகக் கோப்பையில் அவருக்கு இது இரண்டாவது சதமாகும். ஆடுகளத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொண்டு சிறப்பான மற்றும் நிலையான ஆட்டத்தை இந்திய அணிக்காக ரோகித் சர்மா விளையாடினார். 32 வயதான ரோகித் சர்மா இந்த போட்டியில் மொத்தமாக 144 பந்துகளை எதிர்கொண்டு 122 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now