#1 ரோகித் சர்மாவின் பொறுப்பான சதம்
ஆரம்பத்தில் இந்திய அணியின் ரன்கள் மிகவும் குறைவாகவே இருந்தது. கிறிஸ் மோரிஸ் மற்றும் காகிஸோ ரபாடா அதிரடி பந்துவீச்சை மேற்கொண்டனர். இரண்டு பந்துவீச்சாளர்களும் ஆடுகள தன்மைகேற்றவாறு பந்துவீச்சை மேற்கொண்டு ரன்களை கட்டுப்படுத்தினர். அத்துடன் 3வது ஓவரில் ரபாடா, தவானின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணி பவர் பிளேவில் 34 ரன்களை மட்டுமே அடித்தது.
பின்னர் களமிறங்கிய விராட் கோலியும் ஆன்டில் பெலுக்வாயோ வீசிய பந்தில் டிகாக்கிடம் கேட்ச் ஆனார். இதனால் இந்திய ரசிகர்கள் சற்று சோகமடைந்தனர். இந்திய துனைக் கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பான மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த ஆரம்பித்தார். தனது முழு அனுபவத்தையும் இந்த போட்டியில் வெளிபடுத்தினார். ரோகித் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை கணித்து விளையாடி 3வது விக்கெட்டிற்கு கே.எல்.ராகுலுடன் இனைந்து 85 ரன்களை குவித்தனர்.
ஆட்டத்தின் தன்மைக்கேற்றவாறு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார் ரோகித். உலகின் நம்பர் 2 ஓடிஐ பேட்ஸ்மேன், சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார், அத்துடன் சில சில பவுண்டரிகளை அவ்வப்போது தட்டிவிட்டார். கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய பிறகு, ரோகித் சர்மா, மகேந்திர சிங் தோனியுடன் இனைந்து 4வது விக்கெட் பார்ட்னர் ஷிப்பிற்கு 74 ரன்களை விளாசினர். இந்த பார்டனர் ஷீப் மூலம் இந்தியா வசம் வெற்றி வாய்ப்பு மாறியது.
ரோகித் சர்மா தனது 23வது ஓடிஐ சதத்தை விளாசினார். உலகக் கோப்பையில் அவருக்கு இது இரண்டாவது சதமாகும். ஆடுகளத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொண்டு சிறப்பான மற்றும் நிலையான ஆட்டத்தை இந்திய அணிக்காக ரோகித் சர்மா விளையாடினார். 32 வயதான ரோகித் சர்மா இந்த போட்டியில் மொத்தமாக 144 பந்துகளை எதிர்கொண்டு 122 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.