அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து-இந்தியா மோதும் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற இருந்தது. இரு அணிகளும் 2019 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவியதில்லை. இந்நிலையில் இப்போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டு தற்போது வரை தோல்வியை தழுவாத அணியாக வலம் வருகிறது.
அடுத்தாக இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க ஒரு அணியுடன் மோத உள்ளது. இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டஃபோர்ட் மைதானத்தில் மோத உள்ளது. இந்திய அணி தனது அண்டை நாடான பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் தொடர் வெற்றி வாய்ப்பை கடைபிடிக்கும் நோக்கில் உள்ளது. பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்யும்.
பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் யாரலும் கணிக்க முடியாத அணியாக வலம் வருகிறது. 2019 உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்திய அணி இதுவரை 4 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 1ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி அட்டவணையில் 8வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தான் அணியிலும் சில மேட்ச் வின்னர்கள் உள்ளனர் என்பதை நாம் மறந்திடக் கூடாது. நாம் இங்கு 2019 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த 3 வீரர்களுக்கு எதிராக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
#3 ஃபக்கர் ஜமான்
ஃபக்கர் ஜமான் இந்திய அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் என்பதை யாரலும் மறந்திட இயலாது. 2017 சேம்பியன் டிராபியின் இறுதிப் போட்டியில் 114 ரன்களை குவித்தார். இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை தடுமாறச் செய்து கோப்பையை தன் நாட்டிற்கு எடுத்துச் செல்ல ஜமான் உதவினார்.
ஃபக்கர் ஜமான் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் பாகிஸ்தான் பேட்டிங் லைன்-அப்பில் மிக முக்கியமான வீரராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை அளித்துள்ளார். குறிப்பாக ஜீம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசினார்.
29 வயதான பேட்ஸ்மேன் ஃபக்கர் ஜமான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 48.57 சராசரியுடன் 4 சதங்கள் மற்றும் 10 அரைசதங்களை குவித்துள்ளார். எதிரணி பௌலிங்கை துவம்சம் செய்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர்.
ஃபக்கர் ஜமான் ஸ்ட்ரைக் ரேட் 100க்கு மேலாக கொண்டு தொடக்க பேட்ஸ்மேனாக அதிகம் ஈர்த்துள்ளார். கண்டிப்பாக இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களுள் இவரும் ஒருவர்.
#2 வஹாப் ரியாஷ்
வஹாப் ரியாஷின் பௌலிங் இந்த உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்யும் அளவிற்கு இல்லை. இவரது அதிரடி மற்றும் சிறப்பான பேட்டிங் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த போட்டியில் வந்தது. தனது அணிக்காக ஆஸ்திரேலிய பௌலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து 39 பந்துகளில் 45 ரன்களை குவித்தார்.
வஹாப் ரியாஷ் ஒரு இடது கை வேகப்பந்து மற்றும் ஸ்விங் பந்துவீச்சாளர் ஆவார். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசும் திறமை உடையவர். அத்துடன் 6.2 உயரம் கொண்ட இவர் சரியான பவுண்ஸ் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்வதில் வல்லவராக உள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன்கள் இடதுகை ஸ்விங் வேகப்பந்து வீச்சில் கடுமையாக தடுமாறுவார்கள் என்ற வரலாறு உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இங்கிலாந்து மண்ணில் வஹாப் ரியாஷ் இந்திய பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்ய வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராக இவர்களது ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. 2011 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 46 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது தற்போது வரை அனைத்து இந்திய ரசிகர்கள் மனதிலும் நீக்காமல் இருக்கும்.
காலநிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டால் பௌலர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும். எனவே ஆட்டத்தின் ஆரம்பத்தில் வஹாப் ரியாஷிற்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.
#1 முகமது அமீர்
இந்தியாவிற்கு எதிராக கடும் நெருக்கடியை அளிப்பதில் வல்லவராக முகமது அமீர் உள்ளார். 2019 உலகக் கோப்பையில் தற்போது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். படிப்படியாக தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொணர்ந்து வருகிறார். 3 போட்டிகளில் பங்கேற்று 4.23 எகானமி ரேட்-டுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முகமது அமீர் தனது இடதுகை வேகப்பந்து வீச்சில் தொடர்ந்து 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் திறமை உடையவர். இதே வேகத்தில் ஸ்விங் பௌலிங்கை இரு வேறு கோணங்களில் வீசி எதிரணியை தடுமாறச் செய்யும் திறமை கொண்டவர். காலநிலை ஸ்விங் பௌலிங்கிற்கு சாதகமாக அமைந்துவிட்டால் கண்டிப்பாக எவ்வளவு வலிமையான அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தும் திறமை உடையவர்.
அமீர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் 30 ரன்களை பௌலிங்கில் அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2019 உலகக் கோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 307 ரன்களை குவித்தது. ஆனால் முகமது அமீரின் எகானமி ரேட் 3 மட்டுமே ஆகும்.
2017 சேம்பியன் டிராபியில் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழும் ரோகித் சர்மா, ஷீகார் தவான், விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இப்போட்டியில் 6 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக பாகிஸ்தான் வசம் மாற்றினார்.
அமீருக்கு இங்கிலாந்து மைதானங்கள் மிகுந்த துணை புரிகின்றன். கடந்த காலங்களில் அமீருக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் 2019 உலகக் கோப்பை தொடரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.