#2 வஹாப் ரியாஷ்

வஹாப் ரியாஷின் பௌலிங் இந்த உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்யும் அளவிற்கு இல்லை. இவரது அதிரடி மற்றும் சிறப்பான பேட்டிங் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த போட்டியில் வந்தது. தனது அணிக்காக ஆஸ்திரேலிய பௌலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து 39 பந்துகளில் 45 ரன்களை குவித்தார்.
வஹாப் ரியாஷ் ஒரு இடது கை வேகப்பந்து மற்றும் ஸ்விங் பந்துவீச்சாளர் ஆவார். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசும் திறமை உடையவர். அத்துடன் 6.2 உயரம் கொண்ட இவர் சரியான பவுண்ஸ் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்வதில் வல்லவராக உள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன்கள் இடதுகை ஸ்விங் வேகப்பந்து வீச்சில் கடுமையாக தடுமாறுவார்கள் என்ற வரலாறு உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இங்கிலாந்து மண்ணில் வஹாப் ரியாஷ் இந்திய பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்ய வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராக இவர்களது ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. 2011 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 46 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது தற்போது வரை அனைத்து இந்திய ரசிகர்கள் மனதிலும் நீக்காமல் இருக்கும்.
காலநிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டால் பௌலர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும். எனவே ஆட்டத்தின் ஆரம்பத்தில் வஹாப் ரியாஷிற்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.