#1 முகமது அமீர்

இந்தியாவிற்கு எதிராக கடும் நெருக்கடியை அளிப்பதில் வல்லவராக முகமது அமீர் உள்ளார். 2019 உலகக் கோப்பையில் தற்போது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். படிப்படியாக தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொணர்ந்து வருகிறார். 3 போட்டிகளில் பங்கேற்று 4.23 எகானமி ரேட்-டுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முகமது அமீர் தனது இடதுகை வேகப்பந்து வீச்சில் தொடர்ந்து 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் திறமை உடையவர். இதே வேகத்தில் ஸ்விங் பௌலிங்கை இரு வேறு கோணங்களில் வீசி எதிரணியை தடுமாறச் செய்யும் திறமை கொண்டவர். காலநிலை ஸ்விங் பௌலிங்கிற்கு சாதகமாக அமைந்துவிட்டால் கண்டிப்பாக எவ்வளவு வலிமையான அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தும் திறமை உடையவர்.
அமீர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் 30 ரன்களை பௌலிங்கில் அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2019 உலகக் கோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 307 ரன்களை குவித்தது. ஆனால் முகமது அமீரின் எகானமி ரேட் 3 மட்டுமே ஆகும்.
2017 சேம்பியன் டிராபியில் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழும் ரோகித் சர்மா, ஷீகார் தவான், விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இப்போட்டியில் 6 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக பாகிஸ்தான் வசம் மாற்றினார்.
அமீருக்கு இங்கிலாந்து மைதானங்கள் மிகுந்த துணை புரிகின்றன். கடந்த காலங்களில் அமீருக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் 2019 உலகக் கோப்பை தொடரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.