#3 கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியின் நிலையான அரைசதம்
இந்திய அணியின் பெரும்பாலான ரன்கள் ரோகித் சர்மாவின் பேட்டிங்கிலிருந்தே வெளிபட்டு வந்தது. லோகேஷ் ராகுல் மற்றும் விராட் கோலியின் சிறப்பான அரைசதம் இந்திய அணிக்கு முண்ணணியாக அமைந்தது. இதன்மூலமே இந்தியா தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் 300+ ரன்களை குவிக்க முடிந்தது.
ஷீகார் தவானிற்கு காயம் ஏற்பட்டதால் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தன்னை ஏன் அதிக மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்பதனை நிறுபித்தார். 26வயதான இவர் டாப் ஆர்டரில் ஒரு நிலையான மற்றும் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்தார். இவருடைய நிலையான ஆட்டம் ரோகித் சர்மாவிற்கு மிகவும் பிடித்தது. இதனால் கே.எல்.ராகுல் பொறுமையாகவும், ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாகவும் விளையாட ஆரம்பித்தார். சரியாக வீசப்பட்ட பந்தை பயன்படுத்தி கொண்ட லோகேஷ் ராகுல் தனது முதல் உலகக்கோப்பை அரைசதத்தை விளாசினார்.
கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய பிறகு, விராட் கோலி அவரது இன்னிங்க்ஸை தொடங்கினார். விராட் கோலி ஆர்ம்பத்தில் மிகவும் மெதுவாக நிலைத்து விளையாட தொடங்கினார். சிறு சிறு இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தார் விராட். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவே 11,000 ரன்களை 222 இன்னிங்ஸில் அடித்து சாதனை படைத்தார். விராட் கோலி 65 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 77 ரன்களை குவித்தார்.