#2 குல்தீப் யாதவின் மாயஜாலம்
337 என்ற கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் ஆரம்பத்திலே தனது முதல் விக்கெட்டை இழந்தது. இருப்பினும் பாபர் அஜாம் மற்றும் இவரது பேட்டிங் பார்டனர் ஃபக்கர் ஜமான் நிலைத்து விளையாடினர். மொத்தமாக 104 ரன்களை பார்டனர் ஷீப் செய்து விளையாடினர்.
இந்த இரு பேட்ஸ்மேன்களும் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் யுஜ்வேந்திர சகால் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ஓவரை துவம்சம் செய்து விளையாடினர். சுழல் வித்தையை தன் கைகளில் கொண்ட குல்தீப் யாதவ், பாபர் அஜாம் மற்றும் ஃபக்கர் ஜமானை தனது சுழலில் தடுமாறச் செய்து கொண்டிருந்தார். சைனா மேன் குல்தீப் யாதவ் பந்தை நன்றாக சுழற்றி வீசி பாபர் அஜாமை போல்ட் ஆக்கினார். பின்னர் குல்திப் வீசிய அடுத்த ஓவரிலேயே ஃபக்கர் ஜமான் தவறான ஸ்விப் ஷாட் விளையாட முயன்ற போது சகாலிடம் கேட்ச் ஆகி வெளியேற்றப்பட்டார்.
உலகக்கோப்பை தொடரில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் ஆட்டத்திறன் குறித்து அதிக கேள்வி எழுந்து வந்தது. அத்துடன் இவருக்கு பதிலாக முகமது ஷமியை களமிறக்கலாம் என்ற விவாதமும் நடந்து வந்தது. இருப்பினும் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்து தனது மாயாஜால பௌலிங் வித்தையை உலகிற்கு மீண்டும் அறிவித்துள்ளார்.