#1 மான்செஸ்டரில் ரோகித் சர்மாவின் மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்
ஒரு நெருக்கடியான மிகப்பெரிய போட்டிகளில் அதிக ரன்களை குவிப்பவர் மிகவும் தனித் திறமையுடன் திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிகொணர்ந்து இந்திய அணியில் தனது முக்கியத்துவத்தை மீண்டுமொருமுறை சதம் விளாசி வெளிபடுத்தியுள்ளார். சற்று நெருக்கடியான சூழ்நிலையில் ரோகித் சர்மா பாகிஸ்தானின் வலிமையான பௌலிங்கை சிதரவிட்டார்.
ரோகித் சர்மா சற்று சரியான வேகத்தில் மற்றும் திசையல் வீசிய முகமது அமீரின் பந்துவீச்சை தடுத்து நிறுத்தி விளையாடினார். மற்ற அனைத்து பௌலர்களுக்கு எதிராகவும் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி வந்தார். குறிப்பாக ஹாசன் அலி பந்துவீச்சை அடித்து துவைத்தார். "ஹீட்மேன்" ரோகித் சர்மா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்து ரன்களை குவித்து வந்தார். ஒரு பௌலர்களை கூட சிறப்பாக பந்துவீச ரோகித் விடவில்லை.
இந்திய துனைக் கேப்டனான ரோகித் சர்மா 2019 உலகக்கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக 50+ ரன்களை எடுத்தார். எப்போதுமே ரோகித் அரை சதம் அடித்ததற்கு பின் அவரது பேட்டிங் அதிரிடியாக இருக்கும், இதே வித்தை பாகிஸ்தானிற்கு எதிராகவும் வெளிபடுத்தினார். மூன்று இலக்க ரன்களை நோக்கி தனது பேட்டிங்கை திருப்பினார் ரோகித். உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். ரோகித் சர்மாவினா சிறப்பான பவுண்டரிகள் மற்றும் அதிரடி சிக்ஸர்கள் ரசிகர்களின் இமைகளுக்கு விருந்தாக அமைந்தது. 32 வயதான ரோகித் சர்மா 2019 உலகக்கோப்பை தொடரில் தனது இரண்டாவது சதத்தினை விளாசினார். இவர் தற்போது இவ்வருட உலககோப்பை தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிக்கிறார்.