#2 கிறிஸ் கெய்ல்
"யுனிவர்சல் பாஸ்" என்றழைக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் சிக்ஸர்ளுக்கு அதிக பெயர் போனவர். 39 வயதான அனுபவ பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இந்தாண்டு தொடக்கத்தில் தனது சொந்த மண்ணில் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் தனது இயல்பான பழைய ஆட்டத்திறனை வெளிகொணர்ந்து வந்தார். இந்த தொடரில் கெய்ல் 39 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் அதிக சிக்ஸர்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
2019 உலகக் கோப்பை தொடரில் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகளின் முதல் போட்டியில் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை முறியடித்தார். இவர் தற்போது 40 சிக்ஸர்களை உலகக் கோப்பை தொடர்களில் விளாசியுள்ளார். தென்னாப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் இவரை விட 3 சிக்ஸர்கள் பின்தங்கி உள்ளார்.
எவ்வகையான வலிமையான பௌலிங்கையும் சிதைக்கும் வகையில் இவரது தற்போதைய ஆட்டத்திறன் விளங்குகிறது. அதிரடி சிக்ஸர்களை விளாசி உலகின் சிறந்த ஹிட்டராக வலம் வருகிறார். எதிரணியின் அனல் பறக்கும் பந்துவீச்சை தனது பேட்டிங் மூலம் மைதானத்திற்கு வெளியே அனுப்பும் திறமை கொண்டவர். இவர் பவுண்டரிகளை விளாசுவதை விட சிக்ஸர்களை விளாசவே அதிகம் விரும்புவார். இதனால் அதிக சிக்ஸர்களை விளாச வாய்ப்புள்ள வீரர்களுள் முன்னணி வீரராக கிறிஸ் கெய்ல் திகழ்கிறார்.
#1 ரோகித் சர்மா
இந்தியாவின் ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோகித் சர்மா உலகின் தலைசிறந்த ஒருநாள் தொடக்க வீரராக வலம் வருகிறார். இவருடைய அதிரடி ஆட்டத்திறனின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் பௌலர்களுக்கு அதிக இடற்பாடுகளை வெளிபடுத்தி வருகிறார். இந்திய அணியின் டாப் ஆர்டரில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான இருந்துள்ளார்.
2015ற்குப் பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற பெருமையை ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களுக்கு சொந்த காரரண இவர் அதிக சிக்ஸர்களை சர்வதேச கிரிக்கெட்டில் விளாசியுள்ளார். ரோகித் சர்மா நிலைத்து விளையாட ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். பெரிய ரன்களை கண்டிப்பாக விளாசி விடுவார். வேகப்பந்து வீச்சாளர்களை சரியாக எதிர்கொள்பவர் ரோகித் சர்மா.
இந்திய அணியின் துனைக்கேப்டனான இவருக்கு பேட்டிங் சாதகமான மைதானமாக இருந்து விட்டால் கண்டிப்பாக ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு பெரிய ரன்களை ரோகித் சர்மா விளாசுவார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக கிரிக்கெட் சில சிறப்பான ஷாட்களை ரோகித் சர்மா அடித்துள்ள காரணத்தால் உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்களை விளாச அதிக வாய்ப்புள்ளது.