பன்னிரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் கடந்த மே மாதம் முடிவடைந்தது. இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி தொடரை வென்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இத்தகைய தொடரில் விளையாடுவதால் கூடுதல் பணிச்சுமை மற்றும் காயங்கள் ஏற்படும் என கருதி பல வீரர்கள் விளையாடவில்லை. குறிப்பாக, ஆஸ்திரேலியா அணியின் பெரும்பாலான வீரர்கள் இந்த மிகப்பெரிய டி20 தொடரை புறக்கணித்தனர். இருப்பினும், மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் வெகுவாக கலந்து கொண்டு தொடரின் இறுதி வரை தாங்கள் இடம்பெற்றிருந்த அணிகளுக்கு அற்புதமாக பங்களித்துள்ளனர். கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் வெளிநாட்டு வீரர்களின் பாங்கு போற்றத்தக்கது. இருப்பினும், சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஜொலித்து உலக கோப்பை தொடரில் சோபிக்க தவறிய அவ்வாறான வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.#4.குயின்டன் டி காக் - தென் ஆப்பிரிக்கா: Quinton de Kockதென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக், கடந்த மே மாதம் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு காரணமாய் அமைந்தார். தொடரின் 16 போட்டியில் விளையாடிய இவர், 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 529 ரன்களை குவித்து அமர்க்களப்படுத்தினார். இதன் மூலம், தொடரின் இறுதியில் அதிக ரன்களை குவித்த பட்டியலில் மூன்றாம் இடம் வகித்தார், குயின்டன் டி காக். ஐபிஎல் தொடருக்கு முன்னர், நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் கண்டு நம்பிக்கையளித்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 353 ரன்களை 70.60 சராசரியுடன் குவித்திருந்தார். இதனால் உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாக பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சோபிக்க தவறினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது லீக் சுற்று போட்டியில் 68 ரன்கள் குவித்து சிறப்பாக துவங்கினார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி இரு அரை சதங்கள் உள்பட 253 ரன்கள் மட்டுமே இவர் குவித்துள்ளார். ஓரளவுக்கு பங்களிப்பு இருந்தாலும் உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் அணியை வெற்றி பெறச் செய்ய இது போன்ற குறைவான ரன்கள் போதாது. #3.கிறிஸ் கெயில் - வெஸ்ட் இண்டீஸ்: Chris Gayle"யுனிவர்சல் பாஸ்" என்று ரசிகர்களால் புகழப்படும் கிறிஸ் கெயில், சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் அபாயகரமான வீரர்களில் ஒருவராக இன்றளவும் திகழ்ந்து வருகிறார். கடந்த ஐபிஎல் சீசன்களை போலவே இந்த ஐபிஎல் தொடரிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று 13 போட்டிகளில் விளையாடினார். அவற்றில் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 490 ரன்களை குவித்து அசத்தினார். 39 வயது கடந்த போதும் இவரின் ஆட்டம் பலரை மெய்சிலிர்க்க வைத்தது. 2019 ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 153.60 என்ற வகையில் அமைந்தது. ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னர், நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிறப்பாக விளையாடி அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். இதனால் உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எண்ணினர். இருப்பினும், இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் மொத்தம் 235 ரன்கள் மட்டுமே இவர் குவித்துள்ளார். அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்ததே இவரது சிறந்த ஆட்டமாக கருதப்படுகிறது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் இரு அரை சரங்களை கடந்த போதிலும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க தவறியுள்ளார், கிறிஸ் கெய்ல். தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான இவர், இளம் வீரர்களுக்கு வழிகாட்டுதலாக அமைந்து கூடுதல் ரன்களை குவித்தால் ஆணியின் வெற்றிக்கு காரணமாய் அமைந்து இருக்கும்.