#3.சமிந்தா வாஸ்:
2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் வங்கதேசத்தை எதிர்கொண்டது, இலங்கை அணி. இந்த போட்டியில் டாஸ் வென்று வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது, இலங்கை. இதன்படி ஆட்டத்தின் முதல் பந்தை வீசிய சமிந்தா வாஸ் இன்ஸ்விங்கர் முறையில் தொடக்க பேட்ஸ்மேனான சர்க்காரை வீழ்த்தினார். அடுத்த பந்தில் முகமது அஸ்ரப்ஃபுல் அடித்த பந்தை லாவகமாக பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார், சமிந்தா வாஸ். தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட்களை வீழ்த்தினால் ஹாட்ரிக் சாதனை புரியலாம் என்ற நோக்கத்தில் பேட்ஸ்மேன்களை சூழ்ந்தவாரு ஃபீல்டர்களை நிற்கச் செய்தார். அடுத்த பந்தினை அவுட் ஸ்விங்கர் முறையில் வீசி மஹேல ஜெயவர்தனேவை கேட்ச் மூலம் அவுட் செய்யப்பட்டு விக்கெட்டை கைப்பற்றினார், சமிந்தா வாஸ். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த வங்கதேசம் தொடர்ந்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை. 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
#2.பிரெட்லீ:
உலகின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய பிரட்லீ, பல பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியுள்ளார். 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் கென்யா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனையை புரிந்தார். இவர் வீசிய பந்தில் கென்னடியின் முழங்கையை பதம் பார்த்தது. மணிக்கு 92.1 என்ற மைல் வேகத்தில் வீசிய இவரது பந்தால் தொடக்க பேட்ஸ்மேனின் முழங்கை முறிந்தது. இதனால், அடுத்த பந்திலேயே மணிக்கு 95.4 மைல் வேகத்தில் பந்து வீசி இரண்டாவது ஸ்லிப்பின் மூலம் கேட்ச் செய்யப்பட்டு ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து நம்பிக்கையுடன் தனது வேகத்தை அதிகரித்து அடுத்த பந்தை மணிக்கு 96.6 மைல் வேகத்தில் வந்து வீசியும் டேவிட் ஓபுயாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார், பிரட்லி.
#5.லசித் மலிங்கா:
2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 210 என்ற குறைந்த இலக்கை அடைய வேண்டி இருந்தது, தென்னாப்பிரிக்கா. கடைசி 32 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், லசித் மலிங்கா பந்துவீசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஷான் பொல்லாக் 13 ரன்களை கடந்து விளையாடி கொண்டிருந்த வேளையி,ல் அற்புத யார்க்கார் மூலம் முதலாவது விக்கெட்டை கைப்பற்றினார், லசித் மலிங்கா. அதன் பின்னர், களமிறங்கிய ஆன்டிரூவ் விக்கெட்டை தொடர்ந்து 86 ரன்களில் போராடிக் கொண்டிருந்த ஜாக் காலிசின் விக்கெட்டையும் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அதுமட்டுமல்லாமல், அடுத்த பந்திலேயே மக்காயாவின் விக்கெட்டை வீழ்த்தி தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதலாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை தனதாக்கினார். இதன் மூலம், தென்னாபிரிக்க அணி தோல்வியில் இருந்து தப்ப முடியவில்லை.