உலகக் கோப்பை ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு சுமாரான ஆட்டங்களும், உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய ஆட்டங்களாக பார்க்கப்படும். குறிப்பாக ஒரு சில அணிகளுக்கு இடையிலான கடந்த கால போட்டிகள் சாதரணமாகவே அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வந்துள்ளது. அதிலும் உலகக் கோப்பை தொடரில் அந்த இரு அணிகள் மோதினால் கண்டிப்பாக மேலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
உலகின் இரு வலிமையான கிரிக்கெட் அணிகள் மோதும் போது ஆரம்பம் முதலோ அல்லது இறுதியிலோ ஏதேனும் ஒரு வீரர் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார். இரு நாடுகளும் நட்பு நாடுகளகாவே இருந்தாலும் கிரிக்கெட் என வந்தால் எலியும் பூனையுமாக இருப்பார்கள்.
வாரதொடக்க மற்றும் இறுதி நாள்களாக இருந்தாலும் சரி, விடுமுறை நாளாக இருந்தாலும் சரி, மழை பெய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது விருப்பமான வீரரின் ஆட்டத்தைக் காண ஆடுகளத்திற்கு வருவார்கள். இதற்கு சான்றாக அந்நதந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச தொடர்களை கூறலாம். கிரிக்கெட் விளையாட்டானது மற்ற விளையாட்டை காட்டிலும் மிகவும் சுவாரசியமாக இறுதி வரை இருக்கும்.
நாம் இங்கு 2019 உலகக் கோப்பையில் 5 பெரிய கிரிக்கெட் போட்டிகளை பற்றி காண்போம்.
#5 இங்கிலாந்து vs இந்தியா (ஜுன் 30)
இவ்வருட உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகள் மோதும் போட்டியைக் காண கண்டிப்பாக ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஏனெனில் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 ஓடிஐ அணிகள் மோத உள்ளன.
இரு அணிகளுமே உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாக திகழ்கிறது. இங்கிலாந்து-இந்தியா ஜீன் 30 அன்று பிர்மிகாம்மில் உள்ள எட்க்பாஸ்டோன் ஆடுகளத்தில் மோத உள்ளது. கண்டிப்பாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்து காத்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தை விட ஒருநாள் போட்டிகளில் அதிக முறை வென்றுள்ளது. இந்தியா 96 போட்டிகளில் 53 ல் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து 41 போட்டிகளில் வென்றுள்ளது, இரண்டில் டிரா ஆனது. உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளுக்கு தலா மூன்று வெற்றிகளையும், ஒரு போட்டியில் டிராவும் ஆகியுள்ளது. இவ்வருட உலகக் கோப்பை வெற்றி பெரும் அணி தனது ஆதிக்கத்தை உலகிற்கு தெரிவிக்கும்.
இந்திய நட்சத்திர வீரர்கள்: விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜாஸ்பிரிட் பூம்ரா
இங்கிலாந்து நட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்சர், ஜோ ரூட்
#4 ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து (ஜீன் 29)
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 2015 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதின. இதில் ஆஸ்திரேலியா எளிதாக நியூசிலாந்தை சுருட்டியது. மீண்டும் இவ்வருட உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மோத உள்ளது. தற்காலங்களில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் சாதரணமாகவே பார்க்கப் பட்டாலும், இரு அணிகளும் மோதும் போட்டியை எடுத்துப் பார்த்தால் தங்களது சிறந்த ஆட்டத்திறனை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வெளிபடுத்தியிருக்கும். இரு அணிகளும் மோதும் போட்டி கண்டிப்பாக பரபரப்பாகவே இறுதி வரை செல்லும் என்பது உறுதி. ஆட்டத்தில் ஏற்படும் திருப்புமுனை மற்றும் எதிர்பார நிகழ்வுகள் போன்றவை இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் கூடுதல் சுவாரஸ்யமாகும்.
உலகக் கிரிக்கெட்டில் 129 முறை ஆஸ்திரேலிய-நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டிகளில் ஆஸ்திரேலியா 90 போட்டிகளிலும், நியூசிலாந்து 39 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அத்துடன் உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டியில் ஆஸ்திரேலியா 7 போட்டிகளிலும், நியூசிலாந்து 3 போட்டிகளிலும் வென்றுள்ளன.
கடந்த கால வரலாற்றை தவிர்த்து பார்க்கும் போது தற்போது இரு அணிகளுமே மிகவும் வலிமை வாய்ந்த அணிகளாக உலகக் கிரிக்கெட்டில் திகழ்கிறது. இரு அணிகளிலுமே பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்தும் வீரர்கள் இருப்பதால் கண்டிப்பாக இந்தப் போட்டி சுவராஸ்யமாக இருக்கும். ஜீன் 29 அன்று இரு அணிகளும் தகுதிச் சுற்றில் மோத உள்ளன.
நியூசிலாந்து நட்சத்திர வீரர்கள்: மார்டின் கப்தில், கானே வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டிரென்ட் போல்ட்
ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்: டேவிட் வார்னர், ஸ்டிவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க்
#3 இந்தியா vs ஆஸ்திரேலியா (ஜீன் 9)
இந்திய-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி எப்பொழுதுமே பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் நடந்த கடந்த கால வரலாறுகள் அதிகம் உள்ளது. களத்தில் பெரும் அனல் பறக்கும் பரபரப்பு காணப்பட்டாலும் இரு அணிகளும் அதிக தோழமையுடன் திகழும். இரு அணிகளிலுமே உலகக் கோப்பை தொடரில் மிக வலிமையான அணிகள். இந்தப் போட்டியில் கிடைக்கும் இரு புள்ளிகள் தான் இறுதிப் போட்டியை தீர்மானிக்கும் விதமாக இருக்கும்.
இதுவரை இரு அணிகளும் 126 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று ஆஸ்திரேலியா 77 போட்டிகளிலும், இந்தியா 49 போட்டிகளிலும் வென்றுள்ளன. உலகக் கோப்பை தொடரில் 7ல் ஆஸ்திரேலியாவும், இந்தியா மூன்றிலும் வென்றுள்ளன. 2015 உலகக் கோப்பையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றது.
2019 உலகக் கோப்பையில் ஜீன் 2 அன்று வட்டவடிவ மைதானமான லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் மோத உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியில் மற்றொரு புது நிகழ்வு நடத்தப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய நட்சத்திர வீரர்கள்: விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஜாஸ்பிரிட் பூம்ரா
ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்: டேவிட் வார்னர், ஸ்டிவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா
#2 இந்தியா vs பாகிஸ்தான் (ஜீன் 16)
ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டி மிகவும் அதிரடியான சுவாரஸ்யமான போட்டியாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் உலகக் கோப்பை போட்டியானது மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அனல் பறக்கும் எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.
விராட் கோலி மற்றும் சஃப்ரஸ் அகமது இரு கேப்டன்களும் வெளி வாக்குவாதமின்றி உண்மையான அதிரடி போட்டியாக கொண்டு செல்வர். இந்த போட்டியில் இரு அணி வீரர்களுக்கும் ஒரு புரிதல் ஒப்புணர்வு இருந்து கொண்டே இருக்கும். 127 ஒருநாள் போட்டிகளில் இந்திய பாகிஸ்தான் மோதிய போட்டியில் பாகிஸ்தான் 73 போட்டிகளிலும், இந்தியா 54 போட்டிகளிலும் வென்றுள்ளன. உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதிய 6 போட்டிகளிலும் இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே ஒரு முக்கிய குறிக்கோளுடன் இந்த போட்டியில் களமிறங்கும். இந்த போட்டியை சரியாக புரிந்து வைத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக புரியும்.
இந்திய நட்சத்திர வீரர்கள்: ரோகித் சர்மா, ஷீகார் தவான், குல்தீப் யாதவ்
பாகிஸ்தான் நட்சத்திர வீரர்கள்: பாபர் அஜாம், முகமது ஹபீஜ், வஹாப் ரியாஜ்
#1 இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா (ஜீன் 25)
135 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி மிகவும் அதிரடியாகவே இருக்கும். இருப்பினும் இரு அணி வீரர்களும் ஒரு நல்ல நண்பர்கள். 2019 ஐபிஎல் தொடரில் வார்னர்-பேர்ஸ்டோ ஆகியோரின் பார்டனர்ஷீப் அதிரடி ஆட்டத்தை இதற்கு சான்றாக கூறலாம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டி எப்போதுமே விருவிருப்பாகவே இருக்கும் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரியும். குறிப்பாக ஆஸஸ் எனப்படும் வருட இறுதி டெஸ்ட் தொடர் இதற்கு சான்றாக கூறலாம்.
இரு அணிகளும் மோதிய பயிற்சி ஆட்டத்தில், ஓராண்டு தடைக்குப் பிறகு மீண்டு வந்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் இங்கிலாந்து ரசிகர்களால் ஏளனத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இருப்பினும் அவர்கள் அந்த போட்டியில் அதனை கண்டுகொள்ளாமல் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணிகளும் மோத உள்ள போட்டி கண்டிப்பாக ஒரு போர்களம் போல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதுவரை இரு அணிகளும் 144 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 81 போட்டியிலும், இங்கிலாந்து 61 போட்டியிலும் வென்றுள்ளன. 2 போட்டிகள் சமமாக முடிந்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் மோதி ஆஸ்திரேலியா 5லும், இங்கிலாந்து 2லும் வென்றுள்ளது.
ஜீன் 25 அன்று இரு அணிகளும் மோதும் போட்டி லண்டனில் உள்ள லார்டஸ் மைதானத்தில் மோத உள்ளது.