#1 இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா (ஜீன் 25)
135 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி மிகவும் அதிரடியாகவே இருக்கும். இருப்பினும் இரு அணி வீரர்களும் ஒரு நல்ல நண்பர்கள். 2019 ஐபிஎல் தொடரில் வார்னர்-பேர்ஸ்டோ ஆகியோரின் பார்டனர்ஷீப் அதிரடி ஆட்டத்தை இதற்கு சான்றாக கூறலாம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டி எப்போதுமே விருவிருப்பாகவே இருக்கும் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரியும். குறிப்பாக ஆஸஸ் எனப்படும் வருட இறுதி டெஸ்ட் தொடர் இதற்கு சான்றாக கூறலாம்.
இரு அணிகளும் மோதிய பயிற்சி ஆட்டத்தில், ஓராண்டு தடைக்குப் பிறகு மீண்டு வந்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் இங்கிலாந்து ரசிகர்களால் ஏளனத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இருப்பினும் அவர்கள் அந்த போட்டியில் அதனை கண்டுகொள்ளாமல் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணிகளும் மோத உள்ள போட்டி கண்டிப்பாக ஒரு போர்களம் போல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதுவரை இரு அணிகளும் 144 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 81 போட்டியிலும், இங்கிலாந்து 61 போட்டியிலும் வென்றுள்ளன. 2 போட்டிகள் சமமாக முடிந்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் மோதி ஆஸ்திரேலியா 5லும், இங்கிலாந்து 2லும் வென்றுள்ளது.
ஜீன் 25 அன்று இரு அணிகளும் மோதும் போட்டி லண்டனில் உள்ள லார்டஸ் மைதானத்தில் மோத உள்ளது.