#3 மெக்மதுல்லாவின் சிறப்பான ஃபினிஷிங்
உண்மையாக மெக்மதுல்லாவைப் பற்றி கூறும்போது, உலகில் இவர் ஒரு கவணிக்கப்படாத சிறப்பான கிரிக்கெட் வீரர். வங்கதேசத்தின் வெற்றிகளில் இவருடைய பங்களிப்பு கடைநிலையில் அதிகம் உதவியுள்ளது.
இதே ஆட்டத்திறனை இன்றைய ஆட்டத்திலும் வெளிகொண்ர்ந்து 33 பந்துகளில் 46 ரன்களை விளாசி வங்கதேசத்தின் ரன்களை 330 ரன்களாக உயர்த்தினார். பெரும்பாலும் வங்கதேசம் 305 அல்லது 310 தான் குவிக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருப்பர்.
வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் இவரை 6வது பேட்ஸ்மேனாக களமிறக்கி மீண்டும் மீண்டும் தவறு செய்து வருகிறது. எனவே தனது தவறை சரிசெய்து மெக்மதுல்லாவை 5வது பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும்.
#4 ஷைஃபுதினின் சிறப்பான பௌலிங்
வங்கதேசத்தின் எதிர்கால தூணாக ஷைஃபுதின் திகழ்வார் என்ற மஷ்ரஃப் மொர்டாஜாவின் கூற்றுக்கு இதுவே தக்க பதிலாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி கடைசி ஓவர் வரை தனது தோல்விக்கு இடம் கொடுக்காமல் விளையாடியது. மிடில் ஆர்டரில் வென் டேர் துஸன் சிறப்பான மற்றும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
இருப்பினும் ஷைஃபுதினின் சிறப்பான பௌலிங்கால் வென் டேர் துஸனின் இலக்கு தகர்க்கப்பட்டது. வங்கதேசம் மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறிய போது இளம் வீரர் ஷைபுதினுக்கு ஓவர்கள் வழங்கப்பட்டது. அவர் வீசிய முதல் பந்திலேயே துஸனின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் ஆட்டத்தின் போக்கு வங்கதேசத்திற்கு சாதகமாக அமைந்தது.
#5 அருமையான பந்துவீச்சு திறன்
ஷைஃபுதினுடன் மற்ற பௌலர்களும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டனர். ஷகிப் அல் ஹாசன் மிக முக்கிய விக்கெட்டான எய்டன் மக்ரமின் விக்கெட்டை வீழ்த்தினார்.
அத்துடன் மெஹீடி ஹாசன் மற்றும் மிராஜ் ஆகியோரும் சிறப்பான பௌலிங்கை மேற்கொண்டனர். மெஹீடி ஹாசன், ஃபேப் டுயுபிளஸ்ஸியின் விக்கெட்டை தந்திரமாக வீழ்த்தினார். மிராஜ் அருமையான எகனாமிக்கல் பௌலிங்குடன் பந்து வீச்சை மேற்கொண்டார். இவர் 10 ஓவர்களை வீசி 44 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்தார்.
நட்சத்திர வீரர் முஷ்டபிசுர் ரகுமான் தென்னாப்பிரிக்காவின் மிக முக்கிய விக்கெட்டுகளான டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஜே பி டுமினி ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வங்கதேசம் இதே ஆட்டத்திறனை குழுவாக இனைந்து இனிவரும் போட்டிகளிலும் தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.