உலகக் கோப்பை தொடர் தற்போது பெரும் ஆரவாரத்துடன் தொடக்கி நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது அதிரடியான ஆட்டத்தை தனி நபரகாவோ அல்லது ஒட்டுமொத்த அணியாகவோ வெளிபடுத்தி வருகின்றனர். சில அணிகள் அதிரடி ஆட்டத்துடன் சிறப்பான வெற்றிகளை குவித்து வருகிறது. மற்ற சில அணிகள் மந்தமான நிலையில் உள்ளன. உலகக் கோப்பை என்பது ஒரு நீண்டகால தொடராகும், எனவே ஆரம்பத்தில் எதையும் கணிக்க இயலாது. அத்துடன் உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் தகுதிச் சுற்றில் தலா 9 போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனர். அத்துடன் ஒவ்வொரு அணியிலும் 15 பேர் வீரர்கள் மொத்தமாக இடம்பெற்றுள்ளனர். இதில் சில வீரர்கள் உலகக் கோப்பை தொடர் முழுவதுமே ஆடும் XI-ல் இடம்பெறாமல் வெளியே அமரவைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு காரணம் ஆரம்பத்தில் தேர்வு செய்த அணி கட்டமைப்பு மற்றும் வீரர்களின் ஆட்டத்திறன் சிறப்பாக இருப்பதாகும். நாம் இங்கு உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றும் ஆடும் XI-ல் இடம்பெற வாய்ப்பில்லாத 7 வீரர்களை பற்றி காண்போம், மற்றும் அதற்கான காரணங்களையும் காணலாம்.
#7 மிலிந்தா சிரிவர்தனே
மிலிந்தா சிரிவர்தனே உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றது ஒரு ஆச்சரியமளிக்கும் நிகழ்வாகும். இவர் கடைசியாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் செப்டம்பர் 2017 அன்று பங்கேற்றார். இவர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் போட்டியாளராகவும் இல்லை. இலங்கை அணியில் ஏற்கனவே சில ஆல்-ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளன. திஸாரா பெராரா, தனஞ்செயா தி செல்வா, ஜீவன் மென்டிஸ் ஆகியோர்கள் ஆவார். எனவே சிரிவர்த்தனே ஆடும் XI-ல் இடம்பெற வாய்ப்பில்லை.
#6 டாம் பிளன்டல்
நியூசிலாந்து தேர்வுக்குழு ஓடிஐ கிரிக்கெட்டில் அறிமுகமாகத ஒரு வீரரை உலகக் கோப்பை தொடரில் தேர்வு செய்து அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. நியூசிலாந்து இவரை ஒரு மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்தது. இதற்கு இவர் சரியான வீரர் தான்.
இவ்வருட உலகக் கோப்பை தொடரில் 28 வயதான டாம் பிளன்டலிற்கு ஆடும் XI-ல் இடம்பெற வாய்ப்பு கிடைக்காது. டாம் லேதம் நியூசிலாந்தின் வழக்கமான விக்கெட் கீப்பர். எதிர்பாராத விதமாக இவருக்கு காயம் ஏற்பட்டு ஓய்வு வேண்டும் என நினைத்தால், டாம் பிளன்டலிற்கு ஆடும் XI-ல் இடம்பெற வாய்ப்புண்டு.
#5 ஃபேபியன் ஆலன்
மேற்கிந்தியத் தீவுகள் 2019 உலகக் கோப்பை தொடரில் அதிரடி மன்னர்களை கொண்ட அணியாக திகழ்கிறது. இந்த அணியில் முழுவதும் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் வீரர்களையும், எந்த அணியையும் எந்நேரத்திலும் வீழ்த்தும் திறன் கொண்டதாகவும் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் முக்கியத்துவம் தர வாய்ப்பில்லை. மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்க்க நினைத்தால் ஆஸ்லி நர்ஸை தான் இடம்பெறுவார். ஃபேபியன் ஆலன் அல்ல.
#4 முகமது ஹஸ்னாய்ன்
பாகிஸ்தான் அணி சிறு கால இடைவெளியில் யாரும் அறிந்திராத சில பௌலர்களை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்து வரும். இந்த வழக்கம் தொடரும் வகையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னாய்னை பாகிஸ்தான் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளது. ஹஸ்னாய்ன் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவ்வளவாக இவரிடமிருந்து சிறந்த ஆட்டத்திறன் என ஏதும் வெளிப்படவில்லை. இவர் 5 ஓடிஐ விக்கெட்டுகளுடனும், 60.60 சராசரி மற்றும் 7.39 சராசரியையும் வைத்துள்ளார். முகமது அமீர், ஹாசன் அலி, வகாப் ரியாஜ் போன்ற அனுபவ வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இருப்பதால் அதிகம் மதிப்பிடப்பட்ட ஷாஹீன் ஷா அஃப்ரிடிக்கு கூட ஆடும் XI-ல் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாகிஸ்தானின் சிறந்த வேகப்பந்து படையில், முகமது ஹஸ்னாய்னிற்கு இடமில்லை.