#3 லைம் டவ்சன்
இங்கிலாந்தின் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக லைம் டவ்சன் முதலில் இடம்பெறவில்லை. முதன்மை இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஜோ டென்லி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக லைம் டவ்சனிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லைம் டவ்சன் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவர் மொய்ன் அலி மற்றும் அடில் ரஷித் ஆகியோருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். இவர்களில் எவரேனும் தடுமாறினால் லைம் டவ்சனிற்கு ஆடும் XI-ல் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
#2 கானே ரிச்சர்ட்சன்
கானே ரிச்சர்ட்சன் பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஜெ ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகிய காரணத்தால் கானே ரிச்சர்ட்சன் அந்த இடத்திற்கு சேர்க்கப்பட்டார். கானே ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய ஓடிஐ அணியிலிருந்து நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டிருந்தார். சமீபத்தில் அவரது ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக வெளிபட்ட காரணத்தால் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், பேட் கமின்ஸ், நாதன் குல்டர் நில், ஜெஸன் பெஹாரன்ஆஃப் போன்ற வேகப்பந்து வீச்சுப் படை இருப்பதால் கானே ரிச்சர்ட்சனிற்கு ஆடும் XI-ல் இடம்பெற வாய்ப்பு கிடைக்காது.
#1 தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் உலகக் கோப்பை தேர்வுக்கு முன்னதாக இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பராக பயமறியா இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம்பெறுவாரா அல்லது அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவாரா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்து வந்தது. சிறப்பான விக்கெட் கீப்பங் திறனை தினேஷ் கார்த்திக் தன்வசம் வைத்திருந்த காரணத்தால் அவருக்கு உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் இவர் இந்திய அணிக்காக சமீபத்தில் நிறைய போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடித்து வைத்துள்ளார். 34 வயதான இவர் மிடில் ஆர்டரில் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தும் திறமை உடையவர். இருப்பினும் இந்திய அணியில் இருந்த காலியிடங்கள் தற்போது முழுவதும் நிரம்பியுள்ளன. அதனால் தினேஷ் கார்த்திகிற்கு ஆடும் XI-ல் இடம்பெற வாய்ப்பில்லை. இந்திய அணியின் முதல் உலகக்கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இவருக்கு மாற்று வீரராக விஜய் சங்கர் களமிறங்குவார். எம்.எஸ்.தோனி & ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்திறனுடன் திகழ்வதால் இந்திய அணிக்கு மற்றொரு ஃபினிஷர் என தேவையில்லை. அத்துடன் ஆல்-ரவுண்டர் திறனை தன்வசம் வைத்துள்ள ரவீந்திர ஜடேஜா மற்றும் கேதார் ஜாதவ் சிறப்பான ஆட்டத்திறனுடன் உள்ளதால் தினேஷ் கார்த்திக்கை இந்திய அணி கண்டு கொள்ளாது.