2019 உலகக் கோப்பை தொடரின் பதிமூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இப்போட்டியானது டவுன்லனில் அமைந்துள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுன்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடரில் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறாத ஆப்கானிஸ்தான் அணி 2 வெற்றிகளை பெற்ற நியூசிலாந்து அணியிடம் தங்களது கடும் போராட்டத்தினை அளிக்க உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் தரம் மென்மேலும் மெருகேறி உள்ளது. குறிப்பாக, குறுகிய கால கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ஆப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரத் உல்லாஹ், ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோரின் ஆட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது. இலங்கை அணிக்கெதிரான கடந்த ஆட்டத்திலும் கூட ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 201 ரன்களுக்கு இலங்கை அணியை சுருட்டினர். இருப்பினும், பேட்டிங்கில் சற்று முன்னேற்றம் அடையததால் கடந்த போட்டியில் தோற்று இருந்தது, அப்கானிஸ்தான் அணி.
கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடர்ச்சியான பங்களிப்பால் வெற்றிகளை குவித்து வருகிறது. மேலும், புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இந்த அணி நீடித்து வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, அடுத்து வந்த வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை பெற்று அசத்தி வருகின்றது. இளம் மற்றும் அனுபவம் மிகுந்த வீரர்களின் சரியான கலவையுடன் விளங்கிவரும் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கும் முனைப்பில் களமிறங்க காத்திருக்கின்றது.
ஆடுகள புள்ளி விவரங்கள்:
முதலாவது இன்னிங்சில் சராசரி ஸ்கோர் - 219
இரண்டாவது இன்னிங்சில் சராசரி ஸ்கோர் - 194
அதிகபட்ச ஸ்கோர் - 373 / 6 இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்துள்ளது.
குறைந்தபட்ச ஸ்கோர் - 101 / 10 தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 40.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு தங்களது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
அதிகபட்ச சேசிங்: 231 / 5 கென்யா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி:
அணியின் முக்கிய பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ஷேஷாத் முட்டிவில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 18 வயதான இக்ராம் அலி அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
குல்பாதின் நயிப், ஹஸ்ரத் உல்லாஹ், ரஹ்மத் ஷாஹ், இக்ராம் அலி, ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிதி, முகமது நபி, நஜிபுலாஹ், ரஷித் கான்,டவ்லட் ஜட்ரான், ஹமித் ஹசன், முஜீப் ரஹ்மான்.
நியூசிலாந்து அணி:
கடந்த ஆட்டங்களில் இடம் பெற்ற வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளதால், இந்தப் போட்டியிலும் எவ்வித மாற்றமுமின்றி அதே ஆடும் லெவனுடன் களமிறங்க உள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
கனே வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், காலின் மன்றோ, டாம் லதாம், ஜேம்ஸ் நீசம், காலின் டி கிராண்ட் ஹோம், மிச்செல் சேன்ட்னர், மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன் மற்றும் டிரென்ட் போல்ட்.