நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியைப் பிரிஸ்டல் மைதானத்தில் இன்று எதிர்கொள்கிறது.
2018-ஆம் ஆண்டு இரு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணிக்கோவை மோசமாக அமைந்தது. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியாக இந்த ஆண்டு மீண்டும் தனது வெற்றி முகத்திற்கு திரும்பியது. கடைசியாக விளையாடிய 13 போட்டிகளில் ஒன்பது வெற்றி மற்றும் இரண்டு தொடர்களை வென்று அசத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாத அளவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முக்கிய அங்கமாகச் சில வீரர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
# 5 பாட் கம்மின்ஸ்:
2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியின் பவுலிங் யூனிட்க்கு முக்கிய பங்கு வகிப்பார். 2015-ஆம் ஆண்டு காயம் காரணமாக இரு போட்டிகளில் மட்டுமே விளையாடி 5 விக்கெட்கள் எடுத்தார்.
இதுவரை 48 ஒருநாள் போட்டிகளில் 82 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2019-ஆம் ஆண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்த்திலும் சிறப்பாக விளையாடியுள்ளார். பவுலிங் சராசரி 14.29, 6 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
26 வயதான மிட்செல் ஸ்டார்க் கம்மின்ஸ் ஆகியோரின் கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.
கம்மின்ஸ் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேனை தனது வேகம், பவுன்ஸ், ஸ்விங் மூலம் பயமுறுத்தும் வகையில் சிறப்பாக பவுலிங் செய்யலாம்.
மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் 10 முதல் 40 ஓவர்கள் வரை கூடுதல் பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள்.
# 4 ரஷீத் கான்:
ஐபிஎல், பிக் பாஷ் லீக் மற்றும் கரேபியன் பிரீமியர் லீக் ஆகிய தொடர்களில் சிறப்பாக பவுலிங் செய்து நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார்.
2015-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார்.
20 வயதான ரஷீத் 59 போட்டிகளில் 125 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் விளையாடியுள்ள போட்டிகளில் 41 போட்டிகள் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளார்.
ஐ.பி.எல். 2019-ஆம் ஆண்டு தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். இதில் 15 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நல்ல தொடக்கத்தை ஆப்கானிஸ்தான் அணிக்கு தரவுள்ளார்.
# 3 ஸ்டீவ் ஸ்மித்:
கடந்த காலங்களில் ஸ்டீவ் ஸ்மித் சில தவறுகள் காரணமாக 31 மார்ச் 2018 முதல் ஒரு வருடத்திற்கு தடைக்கு பிறகு தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். அவர் தற்போதுவரை சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்கள் எடுத்துள்ளார்.
29 வயதான ஸ்மித் சிறந்த ஃபார்மில் இருந்து வருகிறார். நடுத்தர ஓவர்களில் விக்கெட் விடாமல் ரன் ரேட் சீராக கொண்டு செல்வார். கடைசி 10 ஓவரில் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடுவதற்கு துணையாக இருப்பார்.
# 2 மொஹம்மது ஷாஜத்:
ஷாஜத் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு அபாயகரமான தொடக்க வீரர். ஷாஜத் சிறந்த பேட்ஸ்மேன்னாக ஆப்கானிஸ்தான் அணிக்கு சமீப காலமாக விளையாடி வருகிறார். 82 ஒருநாள் போட்டிகளில் 2,727 ரன்கள் மற்றும் ஆறு சதங்கள் அடித்துள்ளார்.
ஆசியா கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை தருவார் என்பதில் சந்தேகம் இல்லை.
# 1 மிட்செல் ஸ்டார்க்:
ஆஸ்திரேலியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஸ்டார்க் இருந்து வருகிறார். தனது முதல் தொடரிலிருந்து 75 போட்டிகளில் 145 விக்கெட் எடுத்துள்ளார்.
ஸ்டார்க்கின் முதல் உலகக்கோப்பை 2015-ஆம் ஆண்டு அறிமுகமானது. எட்டு போட்டிகளில் 22 விக்கெட் வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
தனது வேகமான பவுலிங்கில் யார்க்கர்கள், ஸ்விங், பவுன்சர்கள் என பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார்.
எழுத்து- ரொனால்ட் க்ரோல்பர்
மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்