நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தத்தை 2019 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு மேலும் 45 நாட்கள் நீட்டித்து, உறுதி செய்துள்ளது பிசிசிஐ. சாஸ்திரி-யுடன் மற்ற பயிற்சி ஆட்களின் ஒப்பந்தமும் 2019 உலகக் கோப்பைக்கு பின் மேலும் 45 நாட்கள் நீட்டித்துள்ளது.
உங்களுக்கு தெரியுமா...
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். 2017ல் அணில் கும்ளே இந்திய பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். இது பெரிதும் விவாதத்திற்கு உள்ளானது. அதன்பின் இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவி சாஸ்திரி இந்திய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2019 உலகக் கோப்பை தொடருடன் ரவி சாஸ்திரியின் அதிகாரபூர்வ ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது.
கதைக்கரு
ரவி சாஸ்திரியுடன் மற்ற பயிற்சியாளர்களான, சஞ்சய் பங்கர் (பேட்டிங் கோச்), பரத் அருண் (பௌலிங் கோச்), ஆர். ஶ்ரீதர் (ஃபீல்டிங் கோச்), ஆகியோர் அவரவரது பணியை உலகக் கோப்பை முடிந்து 45 நாட்கள் மேற்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது எதற்காக என்றால் இந்திய அணி உலகக் கோப்பை தொடர் முடிந்த உடனே மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளதால் உடனடி பயிற்சியாளரை தேர்வு செய்வதென்பது கடினமான விஷயம்.
இந்த முடிவு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு தலைமையில் நடத்தப்பட்ட சந்திப்பில் எடுக்கப்பட்டது. இந்த அறிக்கையை பிசிசிஐ-யின் அதிகாரபூர்வ இனைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பிசிசிஐ-யின் இந்த சந்திப்பில் பிசிசிஐ நிர்வாக தலைவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் அனைவரது ஒப்பந்தத்தையும் 45 நாட்கள் நீட்டித்தார். இது தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவையான ஒரு முடிவாகும் என்ற கோணத்தில் நிர்வாக இயக்குனர் முடிவு செய்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் பதவிக்கான நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற உள்ளது.
அடுத்தது என்ன?
ரவிசாஸ்திரி தலைமையிலான இந்திய பயிற்சி குழு ஒரு புரியாத புதிராகவே திகழ்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு பிறகு ரவீந்திர சாஸ்திரி இந்திய பயிற்சியாளராக இருப்பாரா அல்லது விராட் கோலி வேறு ஒரு பயிற்சியாளரை பரிந்துரை செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும். ரவி சாஸ்திரிக்கு பதிலாக வேறு பயிற்சியாளர் மாற்றம் செய்யப்பட்டால் விராட் கோலி கேப்டனாக இருக்கும் போது மூன்றாவது பயிற்சியாளருடன் கை கோர்பார். இந்திய கேப்டன் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க பரிந்துரைக்க கூட வாய்ப்புள்ளது. ஏனெனில் சமீபத்திய காலங்களில் கோலி-சாஸ்திரி தலைமையில் இந்திய அணி அதிகப்படியான சாதனைகளை படைத்துள்ளது.