நடந்தது என்ன?
இந்திய அணியின் இடது கை தொடக்க ஆட்டக்காரர் ஷீகார் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சிறு காயம் அடைந்ததை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. தற்போது இவரது காயம் குறித்த புதிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உங்களுக்கு தெரியுமா...
உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் இரண்டாவது போட்டியில் ஷீகார் தவான் 109 பந்துகளில் 117 ரன்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தவான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அவரது இடது கை கட்டை விரலில் அடி பட்டது. அதனால் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது தவான் ஃபீல்டிங் செய்ய களமிறங்கவில்லை.
இருப்பினும், தற்போது கிடைத்த தகவலின்படி ஷீகார் தவானிற்கு ஏற்பட்டுள்ள காயம் மிகச் சிறு காயமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதைக்கரு
ஷீகார் தவானின் காயம் குறித்த செய்தி வெளியிடப்பட்ட உடன் அடுத்து வரும் உலகக் கோப்பை போட்டிகளில் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்கள் என்ற பல்வேறு விவாதங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அனைத்து வதந்திகளுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதுத் தகவல் ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஷீகார் தவான் இங்கிலாந்தில் இந்திய அணியுடனே தொடர்ந்து இருப்பார் எனவும், அவரது கட்டை விரல் காயம் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்திய தொடக்க ஆட்டக்காரருக்கு தனது உடற் தகுதியை மெருகேற்ற அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் மாற்று ஆட்டக்காரர்கள் என புதிய வீரர்கள் யாரும் உலகக் கோப்பை அணியில் இடம்பெற மாட்டார்கள் என பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
இருப்பினும் ஷீகான் தவான் அடுத்த இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் களமிறங்க மாட்டார் எனத் தெரிகிறது. இந்திய அணி அடுத்த இரண்டு உலகக் கோப்பையில் மார்ச் 13 அன்று நியூசிலாந்தையும், மார்ச் 16ல் தனது பரம எதிரி பாகிஸ்தானையும் சந்திக்க உள்ளது. பாகிஸ்தானிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு ஜீன் 22 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
அடுத்தது என்ன?
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஷீகார் தவானின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அடுத்த சில நாட்களுக்கு ஸ்டைலிஷ் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் ஷீகார் தவானின் பேட்டிங்கை இந்திய அணி பெரிதும் மிஸ் செய்யும். கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணியில் ஷீகார் தவானிற்கு பதிலாக யார் இடம் பெற்று விளையாடப் போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
முதல் இரு உலக கோப்பை போட்டியில் வென்ற இந்திய அணி ஜீன் 13 அன்று நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளுமே உலகக்கோப்பையில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. எனவே இப்போட்டி இரு அணி ரசிகர்களுக்குமே மிகுந்த விருவிருப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.