நடந்தது என்ன?
2019 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய போட்டியில் கள நடுவர்கள் அதிகம் தவறான முடிவுகளை அளித்து வந்தது அனைவரும் காண முடிந்தது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு கள நடுவர்கள் அளித்த முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என அந்த அணியின் ஆல்-ரவுண்டர் கார்லோஸ் பிராத்வெய்ட் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
கள நடுவர்கள் கிறிஸ் கஃப்னே மற்றும் ரூசிரா பல்லியாகுர்கி ஆகியோர் அதிக தவறான முடிவுகளை ஆஸ்திரேலிய-மேற்கிந்தியத் தீவுகள் மோதிய போட்டியில் அளித்து வந்தனர். கிறிஸ் கெய்லிற்கு வழங்கிய அவுட் தவறான முறையில் பந்துவீசி எடுக்கப்பட்டது ஆகும். அத்துடன் ஜேஸன் ஹோல்டருக்கு இரண்டு முறை தவறான முடிவுகளை கள நடுவர்கள் அளித்து வந்தனர். ஆனால் மூன்றாவது அம்பையரிடம் முறையிட்டு இரண்டு முறையும் அந்த விக்கெட்டை தடுத்தார்.
கதைக்கரு
டிரென்ட பிரிட்ஜில் நடந்த ஆஸ்திரேலிய- மேற்கிந்தியத் தீவுகள் மோதிய போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 5ற்கும் மேலான தவறான முடிவுகளை களநடுவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அளித்தனர். ஆனால் டி.ஆர்.எஸ் மூலம் அந்த விக்கெட்டுகள் மீட்டு எடுக்கப்பட்டது.
ஆட்ட முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கரோலஸ் பிராத்வெய்ட், கள நடுவர்களின் தவறான முடிவுகளினால் சிற்சில இடங்களில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி வாய்ப்பு பறிபோனதைப் பற்றி அவர் வார்த்தைகளால் தெரிவிக்கவில்லை.
"நான் தற்போது கூறுவதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனக்கு அபராதம் விதிக்குமா என தெரியவில்லை. ஆனால் நடுவர்களின் முடிவு எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது."
அத்துடன் ஆல்-ரவுண்டர் பிராத்வெய்ட், ஒரே ஓவரில் நடுவர்களின் மூன்று தவறான முடிவுகளினால் மேற்கிந்தியத் தீவுகளினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை.
"ஒரு ஓவரில் மூன்று தவறான அவலமான முடிவை அறிவித்ததிற்கு கள நடுவர்கள் வெட்கப்பட வேண்டும். இது எங்கள் அணி வீரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்ததோடு கோபத்தையும் அளித்தது."
இந்த போட்டியின்போது மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் "கள நடுவர்களின் தவறான முடிவுகளை சுட்டி காட்ட தயக்கம் காட்டவில்லை".
முதலில் என்னை மன்னித்து விடுங்கள், இந்த போட்டியில் கள நடுவர்கள் மிகவும் கோரமான முடிவுகளை அளித்து நடுவர்களின் மானத்தை வாங்கியுள்ளனர்.
இதனை அவர் அதிகாரபூர்வ நேரலை வர்ணனையாளர்கள் நிகழ்விலே தெரிவித்துள்ளார்.
கள நடுவர்களுக்கு அவர்களின் முடிவில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதது போல முடிவை அறிவித்துள்ளனர். டி.ஆர்.எஸ் என்ற முறை மூலம் சில சில தவறான முடிவுகள் தகர்க்கப்பட்டதாகவும் மைக்கேல் ஹேல்டிங் கூறியுள்ளார்.
இரு நடுவர்களும் சரியான மனநிலையில் இல்லாததது போலவே செயல்பட்டனர். ஒரு வித பயத்துடனே அந்த போட்டி முழுவதும் இருந்தனர். ஆனால் இருவரது முடிவுகளுமே மிகவும் கோரமானதாகும்.
அடுத்தது என்ன?
ஐசிசிக்கு இது போன்ற தவறான முடிவுகளை அளித்த நடுவர்களை பற்றிய புகார்கள் வருவது புதியதல்ல. உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டிகளுமே அனைத்து அணிகளுக்கும் மிக முக்கியமானது என்பதால் கள நடுவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் செயல்பட வேண்டும். அத்துடன் அத்தகைய திறன் கொண்ட நடுவர்களை மட்டுமே ஐசிசி நியமிக்க வேண்டும் என்பது கிரிக்கெட் வள்ளுநர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாகும்.