நடந்தது என்ன?
முன்னாள் நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் 2019 உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியின் இறுதி முடிவு எவ்வாறு இருக்கும் என தனது கற்பனையை வெளியிட்டுள்ளார். 6 வாரங்கள் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவில் ஒவ்வொரு உலகக் கோப்பை அணிகள் புள்ளி பட்டியலில் பிடிக்கும் இடத்தை மெக்கல்லம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
12வது உலகக் கோப்பை கிரிக்கெட் சீசன் இங்கிலாந்தில் மற்றும் வேல்ஸில் மே30 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக் கோப்பை தொடரில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கற்பனை கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அத்துடன் உலக கோப்பைக்கு முன்னரே தகுதிச் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளையும் கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்து வைத்துள்ளனர்.
கதைக்கரு
மற்ற கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கணிப்பை வெளியிட்டு வந்ததைப் போல பிரண்டன் மெக்கல்லமும் உலகக் கோப்பை தொடருக்கான தனது கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றிகள் மற்றும் தோல்விகளை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக மெக்கல்லம் வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து சமீப காலமாக உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்வதால் 8 வெற்றிகள் மற்றும் 1 தோல்விகளுடன் புள்ளி அட்டவனையில் முதலிடத்தை இங்கிலாந்திற்கு மெக்கல்லம் அளித்துள்ளார். இவரது ஒப்பீட்டின் படி இந்திய அணி 8 வெற்றிகளுடன் 2வது இடத்தை பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவி தகுதிச் சுற்றில் 6 வெற்றிகளுடன் 3வது இடத்தை பிடிக்கும் என தனது கணிப்பில் வெளியிட்டுள்ளார்.
புள்ளி அட்டவனையில் நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிகழும் என 37 வயதான அனுபவ கிரிக்கெட் வீரரான மெக்கல்லம் தனது கணிப்பில் கூறியுள்ளார். இந்த 4 அணிகளும் 5 வெற்றிகளுடன் ஒரே புள்ளிகளை தகுதிச் சுற்று முடிவில் பெற்றிருக்கும் எனவும், நெட் ரன் ரேட் யார் சிறப்பாக வைத்துள்ளார்களோ அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறம் எனவும் கூறியுள்ளார். முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கருத்துப்படி நியூசிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என மெக்கல்லம் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை விட மிக அதிக வெற்றிகளை பெறும் என மெக்கல்லம் கணித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியில் இரு அணிகளுக்கும் மெக்கல்லம் வெற்றியை அளித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அடுத்தது என்ன?
மெக்கல்லமின் கணிப்பு சரியாக இருக்குமா என்பதைக் காண ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இவர் கணித்துள்ள டாப் 3 அணிகள் மற்ற கிரிக்கெட் வல்லுநர்கள் கிட்டத்தட்ட கணித்து வைத்திருந்ததுதான். ஆனால் இவர் தேர்வு செய்துள்ள மற்ற அணிகளின் வெற்றி வாய்ப்பு சரியாக இருக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.