#3 மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். இவருக்கு அவ்வப்போது காயம் ஏற்படுவதால் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார். அதனால் இவரது ஆட்டம் சீராக இருக்காது. ஆனால் இந்திய அணி இவரது பந்துவீச்சை சரியாக கணிக்க தவறும். ஏனெனில் ஸ்டார்கின் மின்னல் வேக பந்துவீச்சே காரணம்.
கடந்த வருடத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களின் பௌலிங்கை சரியாக எதிர்கொண்டது இல்லை. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, ஷீகார் தவான், விராட் கோலி போன்றோர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுகின்றனர். இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் பௌலிங்கை எதிர்கொள்ள கண்டிப்பாக தடுமாற வாய்ப்புள்ளது.
மிட்செல் ஸ்டார்க் தான் இழந்த ஆட்டத்திறனை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் மீட்டெடுக்கும் வகையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் ஆட்டத்தின் தொடக்க ஓவர், மிடில் ஓவர் மற்றும் டெத் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு மேற்கிந்தியத் தீவுகளை 289 என்ற ஆஸ்திரேலிய இலக்கை அடைய முடியாமல் செய்தார்.
இவர் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச்சை மேற்கொள்கிறார். ஸ்விங் பந்துவீச்சில் அசத்தி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை அளிப்பார். இவரது இன் ஸ்விங் யார்க்கர் மிகவும் அருமையாக இருக்கும். எனவே வரும் ஞாயிரன்று நடைபெறவுள்ள இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை மிட்செல் ஸ்டார்க் தனது பௌலிங்கில் அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை.