#2 டேவிட் வார்னர்
கடந்த சில வருடங்களாக இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலை அளித்து வருபவர் டேவிட் வார்னர். ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே ஆதிரடி ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்.
மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவிற்கு எதிராக டேவிட் வார்னர் சிறப்பான சாதனையை வைத்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 15 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 45.43 சராசரியுடன் 636 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும்.
டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார். தடையிலிருந்து டேவிட் வார்னர் மீண்டு வந்ததிலிருந்து டேவிட் வார்னரின் ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக உள்ளது. 2019 ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இவர் இதே ஆட்டத்திறனை சர்வதேச கிரிக்கெட்டிலும் வெளிபடுத்துவார்.
வார்னர் 2019 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான முதல் போட்டியில் 89 ரன்களை குவித்து இறுதி வரை நிலைத்து விளையாடினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குறைவான இலக்கை எளிதாக அடையும் திறமை கொண்டவர் டேவிட் வார்னர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இவர் சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும் இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.