#1 ஸ்டிவன் ஸ்மித்
ஸ்டிவன் ஸ்மித் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தற்போது திகழ்கிறார். தரவரிசையில் முதல் இடத்தில் திகழும் விராட் கோலியுடன், ஸ்டிவன் ஸ்மித்தை அதிகம் ஒப்பிட்டு அடிக்கடி கிரிக்கெட் வள்ளுநர்கள் கருத்து தெரிவிப்பார்கள். இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர்கள்.
ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு டேவிட் வார்னருடன் ஸ்டிவன் ஸ்மித் திரும்பியுள்ளார். இவர் தற்போது வெளிபடுத்தும் ஆட்டத்திறனை காணும் போது ஒரு வருடம் தடையிலிருந்தது போலவே இல்லை. சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவதற்கு முன்பாக ஸ்டிவன் ஸ்மித் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
ஐபிஎல் தொடரில் தனது பழைய ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்து அதனை சர்வதேச கிரிக்கெட்டிலும் அமல்படுத்தினார். 2019 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, எனினும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் மீண்டும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 79 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. ஸ்மித் ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றி நிலைத்து விளையாடி ஆஸ்திரேலிய அணியின் ரன்களை 289 ஆக உயர்த்தினார். இவர் 103 பந்துகளை எதிர்கொண்டு 73 ரன்களை எடுத்தார்.
ஸ்டிவன் ஸ்மித் ஓடிஐ மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக அருமையான சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக போட்டிகளில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 50.75 சராசரியுடன் 609 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும்.