#2.இங்கிலாந்து Vs இலங்கை:
நேற்று நடைபெற்ற உலக கோப்பை தொடரின் 27 வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை ஈடுபட்டனர். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தனது வழக்கமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தியது. அதிகபட்சமாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களான சோப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர்.
இதன் பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை அவரது முதல் பந்திலேயே கபளீகரம் செய்தார், மலிங்கா. இதனைத்தொடர்ந்து அரை சதம் அடித்த ஜோ ரூட்டின் விக்கெட்டையும் அதன் பின்னர், களம் புகுந்த ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் விக்கெட்டுகளும் என நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், மலிங்கா. இங்கிலாந்து தரப்பில், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருவர் மட்டுமே தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் டெத் ஓவர்களில் களம் புகுந்த இங்கிலாந்து அணியின் இறுதிக்கட்ட பேட்ஸ்மேன்கள் பென் ஸ்டோக்ஸ்-க்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தனர். இதன் காரணமா,க தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான உதானாவின் ஓவரின் முதல் இரு பந்துகளில் சிக்ஸர் அடித்து நம்பிக்கை அளித்தார், பென் ஸ்டோக்ஸ். இருப்பினும், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேனான மார்க்வுட் தேவையில்லாமல் தனது விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார். ஆட்ட முடிவில், இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களை குவித்து இருந்தார்.