2019 உலகக் கோப்பையின் முதல் வாரம் முடிவுக்கு வந்துள்ளது. அருமையான கிரிக்கெட் ஆட்டங்களை ரசிகர்களுக்கு வீரர்கள் விருந்தளித்தனர். சில ஒரு பக்க சாதகமான ஆட்டங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது. சில சிறப்பான ஆட்டத்திறனை பேட்ஸ்மேன் மற்றும் பௌலர்கள் முதல் வார உலகக் கோப்பை போட்டியில் வெளிபடுத்தினர். பேட்ஸ்மேன்களிடமிருந்து அதிக ரன்கள் வெளிப்படவில்லை என்றாலும், பௌலர்களால் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. நியூசிலாந்து தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 3 போட்டியில் இரண்டு வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 2 போட்டிகளில் 2 வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது. சில அணிகள் புள்ளி அட்டவனையின் நடுப்பகுதியிலும், தென்னாப்பிரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவி கடைநிலையிலும் உள்ளது.
உலகக் கோப்பையின் முதல் வாரம் சிறப்பாக முடிந்த நிலையில் அடுத்தாக இரண்டாவது வாரத்திற்கு ரசிகர்கள் தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர். இவ்வாரத்தில் அதிக முன்னேற்றங்கள் மற்றும் அணிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவும். முன்னேற்றத்திற்கு முன்பாக முதல் வார உலகக் கோப்பையில் நடந்த எதிர்பாரத 5 ஆச்சரியமளிக்கும் 5 நிகழ்வுகளை காண்போம்.
#1 உலகக் கோப்பையின் முதல் ஓவரை வீசிய இம்ரான் தாஹீர்
2019 உலகக் கோப்பையின் ஆரம்ப போட்டியிலேயே அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸி ஆட்டத்தின் முதல் ஓவரை இம்ரான் தாஹீரிடம் அளித்து வீசச் செய்தார். இது அனைவருக்குமே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்க அணியின் முதல் 10 ஓவர்களை வீச இரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான காகிஸோ ரபாடா மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் இருந்தனர். இது மட்டுமல்லாமல் ஃபேப் டுயுபிளஸ்ஸி ஆரம்பத்தில் டாஸ் போட்ட பிறகு, "இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்" என குறிப்பிட்டுருந்தார்.
ஆனால் சற்று மாற்றி யோசித்த ஃபேப் டுயுபிளஸ்ஸி முதல் ஓவரை சுழற்பந்து வீச்சை வைத்து ஆரமித்தார். 40 வயது சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் தொடக்க ஓவரை வீசுவார் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய் மற்றும் ஜானி நினைத்திருக்க மாட்டார்கள் என ஃபேப் டுயுபிளஸ்ஸி கூறியிறுந்தார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் ஓவரில் சுழற்பந்து வீச்சை சற்றும் எதிர்பார்க்காத காரணத்தால் ஜானி பேர்ஸ்டோவ் 2வது பந்திலேயே விக்கெட் வீழ்த்தப்பட்டார். தென்னாப்பிரிக்க கேப்டனின் ஆச்சரியமளிக்கும் நகர்வினால் ஜானி பேர்ஸ்டோவ் "கோல்டன் டக்" ஆகி வெளியேறினார்.
#2 பேட்ஸ்மேன்களின் மேல் பௌலர்களின் சிறப்பான ஆதிக்கங்கள்
உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என பல்வேறு பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 500 ரன்கள் ஒரே இன்னிங்ஸில் குவிக்கப்படும் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் 500 ரன்கள் குவிக்க பந்துவீச்சாளர்கள் விடவில்லை. இருப்பினும் 350 ரன்கள் தொடர்ச்சியாக இந்த தொடரில் குவிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில போட்டிகளை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் குறைவான ரன்களே குவிக்கப்பட்டு வருகிறது. 280 ரன் இலக்கை அடையவே இந்த தொடரில் சற்று சிரமமாக உள்ளது.
ஆஸ்திரேலியா அடித்த 288 ரன்களை மேற்கிந்தியத் தீவுகளால் அடைய முடியவில்லை. அத்துடன் இலங்கை நிர்ணயித்த 187 இலக்கை ஆப்கானிஸ்தான் அணியால் அடைய முடியவில்லை. அத்துடன் வங்கதேசம் நிர்ணயித்த 245 ரன்களை நியூசிலாந்து தடுமாறித்தான் அடைந்தது. உலகக் கோப்பையில் சில அணிகள் அதிக நெருக்கடியை சந்தித்து வருகின்றன. ஆடுகளமும் பௌலர்களுக்கு நன்றாகவே சாதகாமாக உள்ளது. ஆரம்பத்தில் ஸ்விங் பௌலிங்கிற்கு இங்கிலாந்து ஆடுகளங்கள் நன்றாகவே ஒத்துழைக்கிறது. சில அணிகள் தங்களது சிறப்பான பந்துவீச்சு மற்றும் நுணுக்கத்தாலே பேட்ஸ்மேனை தடுமாறச் செய்கின்றனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது பவுண்ஸர் மூலமாக எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகிறது. இதன் மூலம் குறைவான ரன்கள் கொண்ட போட்டிகள் உலகக் கோப்பையில் அதிகம் வலம் வருகிறது.
#3 தென்னாப்பிரிக்காவின் தொடர் 3 தோல்விகள்
தென்னாப்பிரிக்க அணி இவ்வருட உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புகள் இல்லை. ஆனால் இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக புள்ளி அட்டவனையில் முதல் நான்கு இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பிடிக்க இயலும். தென்னாப்பிரிக்க அணியின் போட்டி அட்டவணை அவர்களுக்கு சற்று எதிராக அமையும் வகையில் இருந்தது. முதல் 7 நாட்களில் 3 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா பங்கேற்றது. முதல் 3 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் 3 போட்டிகளிலேயே தென்னாப்பிரிக்க அணியின் மோசமான பேட்டிங்கை நாம் காண முடிந்தது.
இங்கிலாந்திற்கு எதிரான முதல் போட்டியில் 311 ரன்களை அடைய முடியாமல் தென்னாப்பிரிக்கா கட்டுபடுத்தப்பட்டது. இங்கிலாந்தை விட 20-25 ரன்களே குறைவாக ரன் அடித்து வந்த தென்னாப்பிரிக்க அணி சேஸிங் செய்யக் கூடிய இலக்கையே அடைய முடியாமல் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் தோல்வியை தழுவியது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் மோசமான பந்துவீச்சின் காரணமாக 330 ரன்களை பௌலிங்கில் அளித்தது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பேட்டிங் சரியாக அமையாத காரணத்தால் சுமாரான ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா.
தென்னாப்பிரிக்கா அதிர்ஷ்டமில்லா அணி தான் என்பதை உணர்த்தும் வகையில் டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக உலகக் தொடரிலிருந்து "ரூல்ட் அவுட்" ஆனார். அத்துடன் லுங்கி நிகிடி சில போட்டிகளில் விளையாடமல் போனார். திடீரென ஏபி டிவில்லியர்ஸ் எவ்வாறு உலகக் கோப்பைக்கு திரும்ப முடியும் என்ற பிரச்சனை வேறு எழுந்தது. மேற்கண்ட அனைத்து நிகழ்வும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அமைந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு தற்போது பெரும் சோதனை காலமாக இருந்து வருகிறது. இருப்பினும் மீண்டும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு திரும்புவார்கள் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
#4 சுழற்பந்து வீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு
தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக நெருக்கடியை பேட்ஸ்மேன்களுக்கு அளிக்கின்றனர். அத்துடன் மெதுவாக ஆட்டத்தை தங்கள் அணி வசம் மாற்றியமைக்கின்றனர். நன்றாக பேட் செய்து கொண்டுள்ள பேட்ஸ்மேனை சுழற்பந்து வீச்சை வைத்து தான் தடுமாறச் செய்ய முடியும். இதனையே அனைத்து அணிகளும் செயல்படுத்துகின்றன. இதுவே உலகக் கோப்பையின் முதல் வாரத்திலும் நடந்தது.
இம்ரான் தாஹீர் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகியோர் தங்களது ரிஸ்ட் ஸ்பின் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களை விட சாதரண சுழற்பந்து வீச்சை மேற்கொள்பவர்கள் இவர்களை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் முகமது நபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 3 விக்கெட்டுகள் ஒரே ஓவரில் வீழ்த்தினார். மொய்ன் அலி பாகிஸ்தானிற்கு எதிராக மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். ஷகிப் அல் ஹாசன் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும், மெஹீடி ஹாசன் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வங்கதேசத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்துள்ளனர். அத்துடன் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் முகமது ஹபீஜ் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். நன்றாக திட்டத்தை வகுத்து சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு, சரியாக செயல்படுத்துவதில் வல்லவராக உள்ளனர் சுழற்பந்து வீச்சாளர்கள். இதே பௌலிங் திறன் உலகக் கோப்பை தொடர் முழுவதும் செயல்படுமா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
#5 பாகிஸ்தானிற்கு எதிராக எதிர்பாரத இங்கிலாந்தின் தோல்வி
பாகிஸ்தான் அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என தோற்றது. அத்துடன் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. அதிக தொடர் தோல்வியை பாகிஸ்தான் சந்தித்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததையடுத்து உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஒரு போட்டியாளளராக இருக்காது என அனைவரும் நம்பினர்.
மறுமுனையில் இங்கிலாந்து மிகவும் வலிமையான அணியாக வலம் வந்தது. சொந்த மண்ணில் சிறப்பான வெற்றி சாதனை மற்றும் தான் தோல்வியடையச் செய்த அதே எதிரணியுடன் மோதவிருப்பதால் வெற்றி தமக்குத்தான் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தான் இந்த போட்டியில் வெல்லாது என்பது போல்தான் செய்திகள் வலம் வந்தன. ஆனால் பாகிஸ்தான் ஒரு கணிக்க முடியாத அணி என்பதை உணர்த்தும் வகையில் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அத்துடன் பௌலர்கள் அதிரடியான பந்துவீச்சை மேற்கொண்டனர்.
அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் வாஹாப் ரியாஜ், முகமது அமீர் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டனர். கணிக்க முடியாத அணி எவ்வாறு இருக்கும் என உலகிற்கு அறிவித்தது பாகிஸ்தான். உலகக் கோப்பையில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் ஆட்டத்திறன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.