#3 தென்னாப்பிரிக்காவின் தொடர் 3 தோல்விகள்
தென்னாப்பிரிக்க அணி இவ்வருட உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புகள் இல்லை. ஆனால் இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக புள்ளி அட்டவனையில் முதல் நான்கு இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பிடிக்க இயலும். தென்னாப்பிரிக்க அணியின் போட்டி அட்டவணை அவர்களுக்கு சற்று எதிராக அமையும் வகையில் இருந்தது. முதல் 7 நாட்களில் 3 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா பங்கேற்றது. முதல் 3 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் 3 போட்டிகளிலேயே தென்னாப்பிரிக்க அணியின் மோசமான பேட்டிங்கை நாம் காண முடிந்தது.
இங்கிலாந்திற்கு எதிரான முதல் போட்டியில் 311 ரன்களை அடைய முடியாமல் தென்னாப்பிரிக்கா கட்டுபடுத்தப்பட்டது. இங்கிலாந்தை விட 20-25 ரன்களே குறைவாக ரன் அடித்து வந்த தென்னாப்பிரிக்க அணி சேஸிங் செய்யக் கூடிய இலக்கையே அடைய முடியாமல் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் தோல்வியை தழுவியது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் மோசமான பந்துவீச்சின் காரணமாக 330 ரன்களை பௌலிங்கில் அளித்தது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பேட்டிங் சரியாக அமையாத காரணத்தால் சுமாரான ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா.
தென்னாப்பிரிக்கா அதிர்ஷ்டமில்லா அணி தான் என்பதை உணர்த்தும் வகையில் டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக உலகக் தொடரிலிருந்து "ரூல்ட் அவுட்" ஆனார். அத்துடன் லுங்கி நிகிடி சில போட்டிகளில் விளையாடமல் போனார். திடீரென ஏபி டிவில்லியர்ஸ் எவ்வாறு உலகக் கோப்பைக்கு திரும்ப முடியும் என்ற பிரச்சனை வேறு எழுந்தது. மேற்கண்ட அனைத்து நிகழ்வும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அமைந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு தற்போது பெரும் சோதனை காலமாக இருந்து வருகிறது. இருப்பினும் மீண்டும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு திரும்புவார்கள் என ரசிகர்கள் நம்புகின்றனர்.