#4 சுழற்பந்து வீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு
தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக நெருக்கடியை பேட்ஸ்மேன்களுக்கு அளிக்கின்றனர். அத்துடன் மெதுவாக ஆட்டத்தை தங்கள் அணி வசம் மாற்றியமைக்கின்றனர். நன்றாக பேட் செய்து கொண்டுள்ள பேட்ஸ்மேனை சுழற்பந்து வீச்சை வைத்து தான் தடுமாறச் செய்ய முடியும். இதனையே அனைத்து அணிகளும் செயல்படுத்துகின்றன. இதுவே உலகக் கோப்பையின் முதல் வாரத்திலும் நடந்தது.
இம்ரான் தாஹீர் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகியோர் தங்களது ரிஸ்ட் ஸ்பின் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களை விட சாதரண சுழற்பந்து வீச்சை மேற்கொள்பவர்கள் இவர்களை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் முகமது நபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 3 விக்கெட்டுகள் ஒரே ஓவரில் வீழ்த்தினார். மொய்ன் அலி பாகிஸ்தானிற்கு எதிராக மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். ஷகிப் அல் ஹாசன் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும், மெஹீடி ஹாசன் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வங்கதேசத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்துள்ளனர். அத்துடன் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் முகமது ஹபீஜ் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். நன்றாக திட்டத்தை வகுத்து சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு, சரியாக செயல்படுத்துவதில் வல்லவராக உள்ளனர் சுழற்பந்து வீச்சாளர்கள். இதே பௌலிங் திறன் உலகக் கோப்பை தொடர் முழுவதும் செயல்படுமா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.