#5 பாகிஸ்தானிற்கு எதிராக எதிர்பாரத இங்கிலாந்தின் தோல்வி
பாகிஸ்தான் அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என தோற்றது. அத்துடன் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. அதிக தொடர் தோல்வியை பாகிஸ்தான் சந்தித்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததையடுத்து உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஒரு போட்டியாளளராக இருக்காது என அனைவரும் நம்பினர்.
மறுமுனையில் இங்கிலாந்து மிகவும் வலிமையான அணியாக வலம் வந்தது. சொந்த மண்ணில் சிறப்பான வெற்றி சாதனை மற்றும் தான் தோல்வியடையச் செய்த அதே எதிரணியுடன் மோதவிருப்பதால் வெற்றி தமக்குத்தான் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தான் இந்த போட்டியில் வெல்லாது என்பது போல்தான் செய்திகள் வலம் வந்தன. ஆனால் பாகிஸ்தான் ஒரு கணிக்க முடியாத அணி என்பதை உணர்த்தும் வகையில் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அத்துடன் பௌலர்கள் அதிரடியான பந்துவீச்சை மேற்கொண்டனர்.
அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் வாஹாப் ரியாஜ், முகமது அமீர் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டனர். கணிக்க முடியாத அணி எவ்வாறு இருக்கும் என உலகிற்கு அறிவித்தது பாகிஸ்தான். உலகக் கோப்பையில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் ஆட்டத்திறன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.