2019 உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் மட்டுமே கொண்டு நடத்துவதாக ஐசிசி முடிவெடுத்தது. அதன்படி, கடந்த 30ம் தேதி பெருமை மிகுந்த இந்த கிரிக்கெட் திருவிழா தொடங்கப்பட்டது. இதுவரை நடைபெற்றுள்ள 11 போட்டிகளில் ஓரிரண்டு போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டன. அவற்றில், நேற்று நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மழையின் தாக்கத்தால் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. எனவே, இதுவரை முடிந்துள்ள போட்டிகளை வைத்து பார்த்தால் பெரும்பாலான போட்டிகள் குறைந்த அளவிலான ஸ்கோர் குவிக்கப்பட்டன. எனவே, இனிவரும் போட்டிகளிலும் இதே நிலை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, இந்த ஒட்டுமொத்த தொடருமே குறைந்த ஸ்கோரில் தொடராக அமைவதற்கான நான்கு காரணங்களை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.கட்டுக்கோப்பான பேட்டிங் இன்னிங்ஸ் இதுவரை அமையவில்லை:
ஒரு சிறந்த ஸ்கோரை அளிப்பதற்கு இன்னிங்சில் தொடக்க முதலே பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு மிடில் ஓவர்கள் மற்றும் ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்கள் வரை தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும். இதுவரை நடைபெற்ற பெரும்பாலான ஆட்டங்களில் பவர் பிளே ஓவர்களிலேயே பல அணிகள் 3 முதல் 4 விக்கெட்களை இழந்து உள்ளனர். இதனால் பார்ட்னர்ஷிப் உருவாகுவது பெருமளவில் குறைந்தன. இதன் தாக்கத்தால் லோயர் மிடில் ஆர்டர் மற்றும் இறுதிக்கட்ட பேட்ஸ்மேன்கள் மீது கடும் நெருக்கடி அளிக்கப்பட்டது. இதே நிலைதான் இந்திய அணியின் பேட்டிங்கிற்கும் தொடர்கிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா ஒருவர் மட்டுமே தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2.இங்கிலாந்து ஆடுகளத்தின் நிலைமை:
இங்கிலாந்து ஆடுகளங்கள் பொதுவாக 300 முதல் 350 ரன்களை குவிக்கும் திறன் பெற்றவை ஆகும். ஆனால், ஒரு சில போட்டிகளில் மட்டுமே இத்தகைய ஸ்கோர்கள் குவிக்கப்பட்டன. இவ்வகையான ஆடுகளங்கள் உலக கோப்பை தொடருக்கான பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டன. கவுன்டி அல்லது மற்ற எந்த சர்வதேச போட்டிகளில் இதுவரை இந்த ஆடுகளங்கள் உபயோகிக்கப்படவில்லை. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வகை ஆடுகளங்கள் பந்து வீசுவதற்கும் பேட்டிங் செய்வதற்கும் ஏதுவாக காணப்படுகின்றன என்று கூறியுள்ளார். இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு பேட்ஸ்மேன்கள் தங்களது திறனை முழுமையாக வெளிப்படுத்தினால் மட்டுமே மேற்கண்ட ஸ்கோரை எந்த ஒரு அணியும் எட்ட முடியும். முதன்முதலாக பாகிஸ்தான் அணி தங்களது 5 பேட்ஸ்மேன்களை கொண்டு பலம் மிகுந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக இது போன்ற பெரிய ஸ்கோரை குவித்து வெற்றியையும் கண்டது. எனவே, இனிவரும் போட்டிகளிலும் கூட பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இவ்வகை ஆடுகளங்கள் அமையும் என்பதற்கு போதிய காரணங்கள் உள்ளன.