நடப்பு உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வேண்டுமென்றே தோற்று பாகிஸ்தானை அரையிறுதி வாய்ப்பில் இருந்து பின்னுக்கு தள்ளி உள்ளதாக பல ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நடப்பு உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வேண்டுமென்றே தோற்று பாகிஸ்தானை அரையிறுதி வாய்ப்பில் இருந்து பின்னுக்கு தள்ளி உள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் பசித் அலி குற்றம்சாட்டி உள்ளதை கண்டித்துள்ளார், இந்தியாவின் ஹர்பஜன் சிங். 2019 உலகக் கோப்பை தொடரின் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து ஏழாவது முறையாக ஒரு குறிப்பிட்ட அணிக்கெதிரான வெற்றியை பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான் அணி அந்த தொடரை போலவே நடப்பு தொடரிலும் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து அரையிறுதி வாய்ப்பில் நீடித்து வருகிறது. இருப்பினும், நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை சற்று மங்கச்செய்துள்ளது.
இருப்பினும், இங்கிலாந்து அணி தனது அடுத்தப் போட்டியில் பலம் இந்த நியூசிலாந்து அணியை சந்திக்க உள்ளது. அந்த போட்டியில் ஒருவேளை இங்கிலாந்து தோல்வி அடைந்து, பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தினால் அடுத்த சுற்று வாய்ப்பில் முன்னேறுவதற்கான போதிய சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான், 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்து உள்ளது. இதன் மூலம், 9 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் நீடித்து வருகிறது. அறையிறுதி சுற்றுக்கான மீதமுள்ள மூன்று இடங்களுக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுடன் இணைந்து பாகிஸ்தான் அணியும் தமது போராட்டத்தினை தொடர்ந்து வருகிறது. எஞ்சியுள்ள இரு போட்டிகளில் வங்கதேசம் மற்றும் இலங்கை என சிறிய அணிகளுடன் விளையாட உள்ளதால், நிச்சயம் அரையிறுதிப் போட்டியில் அடியெடுத்துவிடும், இந்திய அணி. ஒருவேளை நியூசிலாந்து அணியை இங்கிலாந்து தோற்கடித்தால். நிச்சயம் தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டிய நிலைமை வரும்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆரி நியூஸ் எனும் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் பசித் அலி, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரு போட்டிகளில் இந்தியா வேண்டுமென்றே செயல்படாமல் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளும் என கூறியுள்ளது சற்று விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனையடுத்து, இந்தியா டுடே-விற்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்திய அணிக்கு எதிரான கருத்தை தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அலியை கடுமையாக சாடியுள்ளார், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங். மேலும் அவர் கூறியதாவது,
"இவ்வாறு கூறினால் அவருக்கு என்ன வரப்போகிறது. அவர் என்ன பைத்தியக்காரரா? அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்கும் நிச்சயமாக தெரியவில்லை. அவர் கிரிக்கெட்டை எவ்வாறு விளையாண்டாரோ அதுபோலதான் போட்டியையும் பார்க்க வேண்டும். 1992-ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் எப்படி முடிவு செய்யப்பட்டதோ அதுபோல் 2019-ஆம் ஆண்டிலும் முடிவு செய்யப்பட்டது. தற்போது இம்ரான் கான் இவரை கொண்டு ஆட்டத்தை ஃபிக்ஸ் செய்ய்வேண்டும்"
எனவும் வலியுறுத்தியுள்ளார் ஹர்பஜன்.
இந்திய அணிக்கு எஞ்சியுள்ள இரு போட்டிகளில் நிச்சயம் ஒரு வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்புக்கு இந்தியா முன்னேறி விடும். மற்றொரு முனையில், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிச்சயம் வெற்றி பெற்ற கையோடு பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால், அடுத்த சுற்றை நோக்கி பயணிக்க இயலும்.