"கணிக்கமுடியாத பாகிஸ்தான் அணி" என்ற கூற்றை நாங்கள் விரும்பவில்லை - ஹாசன் அலி

Hasan Ali was impressive with the ball against England
Hasan Ali was impressive with the ball against England

நடந்தது என்ன?

பாகிஸ்தான் அணி தனது தவற்றை திருத்திக் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அதிரடி அணியாக திகழ்கிறது என இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதிய உலகக் கோப்பை போட்டியின் முடிவில் தெரிவித்துள்ளார் ஹஸன் அலி. அத்துடன் நீண்ட காலமாக பாகிஸ்தான் மீதுள்ள "கணிக்கமுடியாத அணி" என்ற கூற்றை தாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

உங்களுக்கு தெரியுமா...

பாகிஸ்தான் அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பேட்ஸ்மேன்களின் சொதப்பளினால் 105 ரன்களில் சுருண்டது. இந்த இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் 13.4 ஓவர்களிலேயே எட்டியது. இருப்பினும் உலகக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழும் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில், பாகிஸ்தானில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான ஆல்-ரவுண்டர் திறனை வெளிபடுத்தினர். உலகின் நம்பர் 1 ஓடிஐ அணியான இங்கிலாந்தை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தது.

கதைக்கரு

இங்கிலாந்து-பாகிஸ்தான் போட்டியின் முடிவில் ஹாசன் அலி தெரிவித்துள்ளதாவது,

"நாங்கள் வென்றது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த வெள்ளியன்று நடந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக எங்களது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்ததைக் கண்டு மிகவும் வருத்தம் அடைந்தோம். இருப்பினும் எங்களது வீரர்கள் துவண்டு போகமால் மீண்டும் வீறுநடை போட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நாங்கள் மிகவும் அதிகமாக எங்களது வெற்றிக்காக உழைத்தோம். எங்களை நாங்களே முழுவதுமாக நம்பினோம். அத்துடன் உலகக் கோப்பை வெல்வது என்பது பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒவ்வொருவரின் மிகப்பெரிய குறிக்கோளாக நாங்கள் கொண்டு திகழ்கிறோம். சிலர் "நாங்கள் கணிக்க முடியாதவர்கள்" என்று கூறுகின்றனர். ஆனால் அதை எங்களுடைய வீரர்கள் சுத்தமாக விரும்பவில்லை. முதல் போட்டியின் முடிவிற்கு பிறகு எங்களது வீரர்கள் சற்று மனவேதனையில் இருந்தனர். எனவே நாங்கள் எங்களுடைய தடுமாற்றத்தை நன்றாக ஆராய்ந்தோம். எங்களுடைய திட்டங்கள் மற்றும் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது போன்ற பல விஷயங்களை நாங்கள் குழுவாக விவாதித்துக் கொண்டோம். பாகிஸ்தான் வீரர்களின் தவற்றை களைந்து சிறப்பாக செயல்பட எங்களுடைய பயிற்சியாளர் மைக்கி ஆர்த்தர் மிகவும் உதவியாக இருந்தார்".

ஹாசன் அலி கடந்த ஒரு வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் பௌலிங்கில் மிகவும் தடுமாறி வருகிறார். இங்கிலாந்திற்கு எதிரான இந்த போட்டியில் ஹாசன் அலி பௌலிங்கில் 10 ஓவர்களை வீசி விக்கெட்டுகளை ஏதும் வீழ்த்தாமல் 66 ரன்களை அளித்தார். பேட்டிங்கில் 10 ரன்கள் மட்டுமே அடித்தார். இருப்பினும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இவருடைய அதிரடி பந்தவீச்சு இக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது என்ன?

பாகிஸ்தான் அணி இதே ஆட்டத்திறனோடு வெள்ளி அன்று இலங்கை-க்கு எதிராக பிரிஸ்டோல் மைதானத்தில் மோத உள்ளது. இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கு இது பயிற்சி ஆட்டமாக பாகிஸ்தானுக்கு இருக்கும். அத்துடன் ஆசிய கண்ட அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை பாகிஸ்தான் வெளிபடுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Quick Links