விராட் கோலியின் ஆல்-டைம் சாதனையை முறியடிக்கும் நிலையில் உள்ள ஹாசிம் அம்லா

Hasim Amla
Hasim Amla

விராட் கோலியின் வசம் தற்போது உள்ள சாதனை ஒன்றை ஹாசிம் அம்லா முறியடிக்கும் நிலையில் உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 8000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர் என்ற சாதனைதான் அது.

வலதுகை பேட்ஸ்மேனான ஹாசிம் அம்லா ஓடிஐ கிரிக்கெட்டில் ஏற்கனவே அதிவேக 2000, 3000, 4000, 5000, 6000 மற்றும் 7,000 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். ஹாசிம் அம்லா இந்த சாதனையை 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்திற்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரரான இவர் ஓடிஐ கிரிக்கெட்டில் 171 போட்டிகளில் பங்கேற்று 7910 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி 175 இன்னிங்ஸில் 8000 ரன்களை கடந்து குறைந்த இன்னிங்ஸில் அதிவேக 8000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஹாசிம் அம்லா 90 ரன்களை குவித்தால் இந்த சாதனையை முறியடிப்பார்.

அத்துடன் தென்னாப்பிரிக்கா அணியின் ஓடிஐ கிரிக்கெட்டில் 8000 ரன்களை குவித்த 4வது வீரர் என்ற பெருமையையும் பெறுவார். இந்த இலக்கை ஜாக் காலிஸ், ஏபி டிவில்லியர்ஸ், கிப்ஸ் ஆகியோர் அடைந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா ஓடிஐ கிரிக்கெட் வரலாற்றில் காலிஸ் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தமாக 11,550 ரன்களை ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக ஓடிஐ கிரிக்கெட்டில் 1000 ரன்களை குவித்த ஒரே தென்னாப்பிரிக்க வீரர், ஆல்-ரவுண்டர் ஜாக் காலீஸ். இவர் அவ்வப்போது தென்னாப்பிரிக்க அணிக்கு தனது அனுபவங்களை அளித்து வருகிறார்.

ஹாசிம் அம்லா இன்று இங்கிலாந்திற்கு எதிராக 37 ரன்களை விளாசினால் அந்த அணிக்கு எதிராக 1000 ரன்களை குவித்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெறுவார். 2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி சிறந்து விளங்க ஸ்டைலிஸ் பேட்ஸ்மேன் ஹாசிம் அம்லாவின் பங்களிப்பு கண்டிப்பாக தேவை.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாசிம் அம்லாவின் சீரான ஆட்டத்தின் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க உள்ளார். இதே சீரான ஆட்டத்திறனை உலகக்கோப்பை தொடரிலும் தொடர்ந்து ஹாசிம் அம்லா வெளிபடுத்தினால் தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

உலகக் கோப்பை தொடர் எப்பொழுதுமே தென்னாப்பிரிக்க அணிக்கு சாதகமாக இருந்தது இல்லை. கடந்த காலங்களில் தொடரின் ஆரம்பத்தில் சிறந்து விளங்கும் தென்னாப்பிரிக்க அணி காலிறுதியிலோ அல்லது அரையிறுதியிலோ தோல்வியை தழுவி வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தென்னாப்பிரிக்க அணியின் பௌலிங் சற்று அதிக வலிமையுடன் உள்ளதால் இவ்வருடம் தென்னாப்பிரிக்க அணியின் உலகக் கோப்பை கனவு நனவாக வாய்ப்புள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் தகுதிச் சுற்றில் மே 30 அன்று ஓவல் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக மோத உள்ளது. ஹாசிம் அம்லா உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி-யின் சாதனையை முறியடித்து, தென்னாப்பிரிக்க அணிக்காக உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழும் இங்கிலாந்திற்கு எதிராக தனது பொறுப்பான ஆட்டத்தை அம்லா வெளிபடுத்துவார்.

Quick Links