நடந்தது என்ன?
மார்க் வுட் வீசிய பவுன்ஸர் நேரடியாக ஹஸ்மதுல்லா ஷஹீடி-யின் தலைக்கவசத்தை நேரடியாக தாக்கியது. இருப்பினும் அதை அவர் பொருட்படுத்தாமல் தனது பேட்டிங்கை தொடர்ந்தார். இதற்கான காரணத்தை ஆப்கானிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹஸ்மதுல்லா ஷஹீடி தற்போது தெரிவித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான போட்டியின் முடிவில் தனது இந்த முடிவிற்கான காரணத்தை இவர் வெளிபடுத்தியுள்ளார்.
உங்களுக்கு தெரியுமா?
மார்க் வுட்-டின் மின்னல்வேக பவுன்ஸரில் ஷஹீடி-யின் தலைக்கவசம் உடைந்தது. எனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மருத்துவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அவரை ஓய்வறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேட் செய்து ஆப்கானிஸ்தான் அணியில் அதிக ரன்களை (76) குவித்தார். அந்த போட்டியில் இங்கிலாந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கதைக்கரு
ஹஸ்மதுல்லா ஷஹீடி குடும்பம் அவர் விளையாடுவதை பார்த்து கொண்டிருப்பதன் காரணமாகவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு எதிராக செயல்பட்டதற்கு காரணமாக தெரிவித்துள்ளார். தான் அந்த சமயத்தில் களத்தை விட்டு வெளியேறியிருந்தால் குடும்ப நபர்கள் அதிக வருத்தத்திற்கு உள்ளாகியிருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
"தலைக்கவசத்தில் பந்து தாக்கியும் நான் களத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து பேட் செய்ததற்கு முக்கிய காரணம் என்னுடைய தாயார் என்னை நினைத்து அதிக கவலை கொள்வார் என்பதற்காகதான். என்னுடைய தந்தையை கடந்த வருடம் இழந்தேன், எனவே அவரை மேன்மேலும் வருத்த விரும்பவில்லை. என்னுடைய அனைத்து குடும்ப நபர்களும் நான் விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தனர். என் சகோதரர் ஆடுகளத்திலிருந்து நான் விளையாடுதை பார்த்து கொண்டிருந்தார். எனவே அவர்களை நான் கஷ்டப்படுத்த சிறிது கூட விரும்பவில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மருத்துவர்கள், எங்கள் அணியின் ஃபிசியோ தெரபிஸ்ட் ஆகியோர் என்னுடைய தலைக்கவசத்தின் நடுப்பகுதி உடைந்திருப்பதை கண்டனர். இதனால் என்னிடம் வந்து ஓய்வறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் நான் தற்சமயம் என்னுடைய சக அணி வீரர்களை விட்டுவிட்டு வெளியேறப்போவதில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கு தற்போது என்னுடைய பங்களிப்பு தேவைப்படுகிறது, முழு ஆட்டத்தையும் விளையாடி விட்டுதான் வருவேன் என கூறிவிட்டேன்".
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உறுப்பினர் நவீட் சயீத், மருத்துவர்களுக்கு எதிராக ஹஸ்மதுல்லா ஷஹீடி தொடர்ந்து பேட்டிங் செய்து சிறப்பான இன்னிங்ஸை ஆப்கானிஸ்தான் அணிக்கு அளித்துள்ளதாக ஊடகங்களின் நேர்காணலில் தெரிவித்தார்.
அடுத்தது என்ன?
இவ்வருட உலகக்கோப்பை தொடரில் இவ்வாறு தலைக்கவசம் பாதிக்கும் வகையில் பந்து வீசியிருப்பது இரண்டாவது முறையாகும். கிரிக்கெட் கவர்னரிங் கவுன்சில் வீரர்களுக்கு தலையில் காயம் ஏற்படுவதை தடுக்க ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா, ஜோஃப்ரா ஆர்சர் வீசிய பந்து தலையில் காயத்தை ஏற்படுத்தியது. இதனால் இரு போட்டிகளில் விளையாடமல் போனது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து ரஷீத் கானிற்கு நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தலையில் அடிபட்டது. அதனால் அப்போட்டியில் அவரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பந்து வீச அனுமதிக்கவில்லை.