நடந்தது என்ன?
பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தற்போதைய பாகிஸ்தான் கேப்டன் சஃப்ரஸ் அகமது மீது அதிக கோபத்தை வெளிபடுத்தியுள்ளார். இதற்கு காரணமாக இந்தியாவிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் களத்தில் சஃபரஸ் அகமது எடுத்த தவறான முடிவுகள். மேலும், பாகிஸ்தான் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஏனெனில் பாகிஸ்தானின் வலிமையே பௌலிங்தான் என சோயிப் அக்தர் தனது வெளிபாட்டை கூறியுள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
இந்திய அணி தனது பரம எதிரி பாகிஸ்தானை விட சிறந்த அணி என்பதை மீண்டுமொரு முறை உலகிற்கு நிறுபிக்கும் வகையில் மிகவும் கடினமான உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக தனது 100 சதவீத வெற்றியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சஃப்ரஸ் கான் டாஸ் வென்று இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இந்த நிகழ்வு பாகிஸ்தானிற்கு எதிராக திரும்பி மிடில் ஆர்டரின் பங்களிப்பு இல்லாமலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே 337 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர். ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் மூலம் இந்தியா 300+ ரன்களை கடக்க முடிந்தது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஃபக்கர் ஜமான்(62) மற்றும் பாபர் அஜாம் (48) இனைந்து 104 ரன்கள் பார்டனர் ஷீப் செய்து விளையாடினர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை.
கதைக்கரு
சஃப்ரஸ் அகமது களத்தில் எடுத்த தவறான முடிவிற்கு சோயிப் அக்தர் வெளிப்படையாக தனது கோபத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். அக்தர் கூறியதாவது,
2017 சேம்பியன் டிராபியில் இந்திய அணி செய்த தவறை பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் செய்துள்ளது. சஃப்ரஸ் கான் ஏன் ஒரு மூளையில்லாத முட்டாள் போல் செயல்படுகிறார் என எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் அணி சேஸிங்கில் சோபிக்காது என்பதை இவர் எவ்வாறு மறந்தார். பாகிஸ்தானின் மிகப்பெரிய வலிமையே பௌலிங்தான்.
சஃப்ரஸ் அகமது டாஸ் வென்ற போதே இந்தப் போட்டியை பாகிஸ்தான் பாதி வென்றுவிட்டது. ஆனால் இவரது தவறான முடிவுகள் இவரை வெல்ல விடவில்லை. டாஸ் என்பது ஒரு போட்டிக்கு மிக முக்கிய காரணியாகும். பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 260 ரன்களை அடித்திருந்தாலே தனது அதிரடி பந்துவீச்சை கொண்டு கட்டுபடுத்தியிருக்கலாம். அதனால் தான் இந்த கேப்டன்ஷீப்பை மூளையில்லா முட்டாள் என்று கூறுகிறேன்.
சஃப்ரஸ் அகமதுவை இம்ரான் கான் சாயலில் நான் பார்கிறேன். வருந்தத்தக்க மற்றும் எதிர்பாரத மோசமான கேப்டன்ஷீப்பை சஃப்ரஸ் அகமது பாகிஸ்தானிற்கு அளித்து வருகிறார். சஃப்ரஸ் அகமதுவை இம்ரான் கான் சாயலில் நான் பார்தேன். ஆனால் அது தவறு என்பது தற்போது தான் புரிந்தது.
அடுத்தது என்ன?
பாகிஸ்தான் ஜீன் 23 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. பாகிஸ்தான் உலகக்கோப்பை கனவு நீடிக்கவும், பாகிஸ்தான் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கவும், இனிவரும் அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.