நடந்தது என்ன ?
2019 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வைலதளங்களில் வைரலாகி வருகிறது. இதுக்குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் அரோன் பிஞ்ச் ஆட்டத்தின் இறுதியில் நடந்த நேர்காணலில் இந்த சம்பவத்தை குறித்து விளக்கினார். அப்போது அவர் ஆடம் ஜம்பா அனைத்து போட்டியிலும் தனது கைகளில் கை வெப்படுத்தும் பொருள் (hand warmer) ஒன்றை வைத்திருப்பதாக கூறினார்.
உங்களுக்கு தெரியுமா…
கடந்த ஆண்டு தான் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். இந்த சம்பவம் குறித்து இருவரையும் ஓராண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தனர். தற்போது இவர்கள் தனது தடை காலம் முடிவடைந்து ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மற்றோரு வீரரான ஆடம் ஜம்பா மீண்டும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கதைக்கரு
நேற்று நடந்த (ஜுன் 9) 14லீக் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 57 ரன்களுடனும் ஷிகர் தவான் 117 ரன்களுடனும் வெளியேறினர். இந்த போட்டியில் தவான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை நிலைநாட்டினார்.
இதன் பின் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 82 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா 48 ரன்கள் அடித்து வெளியேறினார்கள். 50 ஓவர்கள் முடிவில் இந்திய 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் பெற்றது. இதன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 316 ரன்தள் மட்டும் பெற்றுது. இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது 24வது ஓவரை ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா வீசினார். அப்போது ஆடம் ஜம்பா தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஏதோ ஒன்றை எடுத்து பந்தில் தேய்ப்பது போல வீடியோ ஓன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. ஆடம் சம்பாவின் சந்தேக நடவடிக்கை குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. அவர் "sandpaper gate 2.0" பயன்படுத்தியதாக பலர் கூறினார்கள்.
ஆனால், இதுக்குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் அரோன் பிஞ்ச் இவர் ஆட்டத்தின் இறுதியில் நடந்த நேர்காணலில் ஆடம் ஜம்பா பயன்படுத்தியது "sandpaper gate 2.0" அல்ல அது கை வெப்படுத்தும் பொருள் என்றார். இங்கிலாந்தில் தற்போது குளிராக இருப்பதால் கை வெப்படுத்துவதற்கு அனைவரும் இந்த "hand warmer" பயன்படுத்துவார்கள் என்றார்.
அடுத்தது என்ன ?
ஆஸ்திரேலியா அணி தனது நான்காவது போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக வருகின்ற 12 ஆம் தேதி விளையாட உள்ளது.