நடந்தது என்ன?
இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தின் அடுத்த இரு போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
உங்களுக்கு தெரியுமா?
கடந்த வெள்ளியன்று இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய போட்டியின்போது ஜேசன் ராய் முதல் இன்னிங்சின் எட்டாவது ஓவரிலேயே ஃபீல்டிங்கை விட்டு வெளியேறினார். அதன்பின் அவர் ஃபீல்டிங் செய்ய வரவே இல்லை. அத்துடன் பேட்டிங் செய்யவும் களமிறங்கவில்லை. தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இவர் இங்கிலாந்தின் இரண்டாவது அதிக ரன்களை குவித்தவர் ஆவார். இவர் 4 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி 215 ரன்களை குவித்துள்ளார்.
கதைக்கரு
மேற்கிந்திய தீவுகள் பேட் செய்து கொண்டிருந்த போது ஆரம்பத்திலே காயம் காரணமாக வெளியேறினார் ஜேஸன் ராய். இங்கிலாந்து தொடக்க தொடக்க ஆட்டக்காரர் காயத்தால் அந்த அணி நிர்வாகம் பெரும் கவலையடைந்துள்ளது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு MRI ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதன் மூலம் ஜேஸன் ராய் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிபட்டு வருவதை மருத்துவக்குழு உறுதி செய்தது. அவர் உலகக் கோப்பையில் மீண்டும் விளையாட முடியுமா என்பது காயத்தின் தரத்தைப் பொறுத்தது ஆகும். தரம் ஒன்றின் படி மிகவும் லேசான காயம் மற்றும் விரைவில் குணமாகக் கூடிய காயமாகும். ஆனால் தரம் 2 அல்லது 3ன் படி காயம் அடைந்திருந்தால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்.
தற்போது ஜேஸன் ராய் இங்கிலாந்தின் அடுத்த இரு உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மொய்ன் அலி அல்லது ஜேம்ஸ் வின்ஸ் ஆகிய இருவரில் ஏதேனும் ஒருவர் இங்கிலாந்து ஆடும் XIல் ஜேஸன் ராய்-க்கு மாற்று வீரராக இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுமுனையில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனுக்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் போது முதுகு வலி ஏற்பட்டது. தற்போது அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளதாகவும், செவ்வாயன்று ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜீன் 18 அன்று ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இயான் மோர்கனை களமிறக்கி இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நெருக்கடிக்கு உள்ளாக தயாராக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன?
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சதம் விளாசினார். எனவே ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியிலும் ஜோ ரூட் தொடக்க ஆட்டக்காரராக இளமிறங்குவார். மொய்ன் அலி ஜேஸன் ராய்க்குப் பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் பௌலராக களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடந்த போட்டியில் இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து 3 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் புள்ளி அட்டவணையில் 4வது இடத்தில் உள்ளது.