நடந்தது என்ன?
2019 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மீண்டு எழும் என்று தனது அணிக்கு நம்பிக்கை தெரிவித்த சோயிப் அக்தரின் டிவிட்டிற்கு சற்று ஆணவத்துடன் பதில் அளித்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன்.
உங்களுக்கு தெரியுமா...
2019 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது. இதில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் அணி 105 ரன்களுக்கு சுருண்டது. மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பிறகு முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஒரு உணர்ச்சிமயமான செய்தியை டிவிட்டர் வாயிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அனுப்பினார்.
கதைக்கரு
பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளிடம் 105 ரன்களில் சுருண்டது. ஷார்ட பிட்ச் பந்தை சரியாக எதிர்கொள்ள பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தவறிவிட்டனர். நாட்டிங்காம் ஆடுகளத்தில் பாகிஸ்தானை வீழ்த்த ஓஸானே தாமஸின் பந்துவீச்சு மிகவும் உதவியாக இருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 106 ரன்களை 7 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 13.4 ஓவர்களிலே சேஸிங் செய்தது.
2017 சேம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. அணியின் மீதுள்ள நம்பிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்ததுள்ளது. எனவே சோயிப் அக்தர் பாகிஸ்தான் அணி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதத்தில் டிவிட்டரில் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
"இரத்தம், வியர்வை, காயமுண்டாக்கும் ஆட்டத்திறன், பந்தய இதயத்துடிப்பு, பல இன்னல்கள். இவையனைத்தையும் நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடும் போது தியாகம் செய்ய வேண்டும். உங்கள் மார்பின் மேல் உள்ள "நட்சத்திரம்" உங்களது அடையாளமாகும். வலுவாக விளையாடுங்கள்! உங்கள் தோல்விக்கான காரணங்களை தேடுங்கள்! வெற்றியுடன் வாருங்கள்!
இந்த டிவிட்டுடன் பீட்டர்சனின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சோயிப் அக்தர் துள்ளி குதிப்பது போன்ற புகைப்படத்தையும் இனைத்துள்ளார்.
இந்த புகைப்படம் கெவிட் பீட்டர்சனை பாதிக்கும் அளவிற்கு இல்லை. அத்துடன் அவரை குறிப்பிடும் வகையிலும் இல்லை. ஆனால் சோயிப் அக்தரின் டிவிட்டிற்கு கெவின் பீட்டர்சன் சற்று ஆணவத்துடன் பதில் அளித்துள்ளார்.
"இந்த புகைப்படத்தை வைத்து வாதிட வேண்டாம் நண்பரே, நான் இந்த போட்டியில் உங்களுடைய அனைத்து ஓவர்களையும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினேன்! ஒரு சிறந்த பேரார்வம்!
சோயிப் அக்தர் இதற்கும் பதில் அளித்துள்ளார்!
சக வீரரே, உங்களுடைய பௌலிங்கை கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது! இருப்பினும் உங்களுடைய விக்கெட்டை வீழ்த்திய பிறகு நான் ஆடிய "சிக்கன் நடனம்" எனக்கே மிகவும் பிடித்திருந்தது.
அடுத்தது என்ன?
பாகிஸ்தான் அணி இன்று தனது இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் மண்ணின் மைந்தர் அணகயான இங்கிலாந்தை நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் போட்டியில் தோல்வியை தழுவியது தகுந்த பாடத்தை கற்பித்திருக்கும். எனவே இரண்டாவது போட்டியில் தனது தவற்றை திருத்தி தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.