Create
Notifications
Advertisement

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2019: ஆட்டம் 21, தென் ஆப்பிரிக்கா Vs ஆப்கானிஸ்தான் , ஒரு முன்னோட்டம்

RSA Vs Afghanistan
RSA Vs Afghanistan
SENIOR ANALYST
Modified 15 Jun 2019
முன்னோட்டம்

போட்டி விவரங்கள்:

தேதி : ஜூன் 15( சனிக்கிழமை)

நேரம்: 12:30PM( தென்ஆப்பிரிக்க ) , 3:00PM( ஆப்கானிஸ்தான்), 10:30AM( இங்கிலாந்து) , 3:00PM(IST)

 இடம்: சோபியா கார்டன்ஸ் கார்டிஃப் வேல்ஸ் ஸ்டேடியம், கார்டிஃப்

வானிலை அறிக்கை:

இதுவரை இங்கிலாந்தில் தொடர் மழை காரணமாக வரலாறு காணாத வகையில் 4 போட்டிகள் தடைப்பட்டுள்ளது. . இன்றைய போட்டியை பொருத்தவரையில் ஒரு முழு விளையாட்டைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது . ஏனெனில், பெரும்பாலுமான மேகமூட்டமான சூழ்நிலைகள் இதனை உறுதிப்படுத்துகின்றது.

ஆடுகளத்தின் விவரங்கள்:

சோபியா கார்டன்ஸ் கார்டிஃப் வேல்ஸ் ஸ்டேடியத்தை பொருத்தவரையில் பவுலர்களுக்கு சாதகமான வகையில் முதல் சில ஓவர்கள் இருக்கக்கூடும். குறிப்பாக, இந்த மாதிரியான நிலைகளில் ஸ்பின் பவுலர்களே ஆட்டத்தின் முக்கிய படிக்கற்களாக கருதப்படுகின்றனர்.

நேருக்கு நேர் சந்தித்த போட்டிகளின் புள்ளிவிவரங்கள்:

இந்த இரு அணியினரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒருபோதும் எதிர்கொள்ளவில்லை, இதுவே அவர்களின் முதல் சந்திப்பாகும்.

Advertisement

தென் ஆப்பிரிக்கா:

பேட்டிங் நிலவரம்:

நம்பிக்கைகுரிய பேட்ஸ்மேன்கள் - குயின்டன் டி காக், ஹாஷிம் அம்லா, மற்றும் பாஃப் டூ பிளெசிஸ்

தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் வரிசையில் சில சிக்கல்கள் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தொடக்கத்திற்குப் பிறகு இது தெளிவாகத் தெரிந்தது. மேலும், அந்த ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஹஷிம் அம்லா மற்றும் ஐடன் மார்க்ராம் போன்றவர்கள் முன்னேறி சிறப்பாக செயல்பட வேண்டும். அதே நேரத்தில் ஆஃப்-ஸ்பின்னர் முகமது நபி, ரஷீத் கான் மற்றும் ஹமீத் ஹாசன் ஆகியோரைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறாக, தென்ஆப்பிரிக்க வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாடுவதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வெல்ல முடியும். 

பவுலிங்:

Ngidi
Ngidi's return from injury will be welcome news for the Proteas.

நம்பிக்கைக்குரிய பவுலர்கள் - கிகிஸோ ரபாடா, லுங்கி இங்கிடி மற்றும் இம்ரான் தாஹிர்

தென் ஆப்பிரிக்கா இந்த உலகக் கோப்பையில் தங்கள் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பால் பெரிதும் மகிழ்ச்சியடையவில்லை. மேலும், பலர் காயங்களால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் போதுமான விக்கெட்டுகளை எடுப்பதில் தோல்வி அடைந்தனர்.  எனினும், தற்போது , லுங்கி இங்கிடி அணிக்கு திரும்ப உள்ளார். இவர் ககிசோ ரபாடாவுடன் சேர்ந்து, ஆப்கானிய பேட்ஸ்மேன்களை விரட்டியடிக்க முடியும். அதுமட்டுமல்லாது , இம்ரான் தாஹிரின் பங்களிப்பும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் ஆடும் லெவன்:

குயின்டன் டி காக் (WK),ஹாசிம் அம்லா, பாஃப் டூ பிளெசிஸ் (C), ரேசி வான் டெர் டஸன், டேவிட் மில்லர், ஆண்டில் பெஹல்குவே, கிறிஸ் மோரிஸ், கிகிஸோ ரபாடா, லுங்கி ங்கிடி மற்றும் இம்ரான் தாஹிர்.

ஆப்கானிஸ்தான்:

Rashid Khan will be key for Afghanistan.
Rashid Khan will be key for Afghanistan.

பேட்டிங்:

நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்கள் - ஹஸ்ரத்துல்லா ஸசாய், ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மத்துல்லா ஷாஹிடி

ஆப்கானிஸ்தானின் நடுத்தர வரிசையில் பெரிதாக எந்த ஒரு பேட்ஸ்மேனும் இல்லாத நிலையில், ஹஸ்முத்துல்லா ஷாஹிதியிடமும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஷாஜாட் காயமடைந்த நிலையில், இளம் இக்ராமும் பெரிதாக ரன்களை குவிப்பதில்லை. எனவே, ஹஸ்ரதல்லா சஜாய் முன்னணி வகிக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது.

பவுலிங்:

நம்பிக்கைக்குரிய பவுலர்கள் - ரஷீத் கான், முகமது நபி மற்றும் ஹமீத் ஹாசன்

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு நம்பிக்கை அளிக்கும் விதமாகவே இருந்தபோதிலும் , அவர்களால் முழு முடிவையும் அவர்களுக்கு சாதகமாக பெற முடியவில்லை.  இதற்கு காரணம், பெரிதும் வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இடம் பெறாதது என்று உறுதியாகக் கூறலாம்.  அதனால், அப்தாப் ஆலம் மற்றும் ஹமீத் ஹாசன் போன்றவர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையை சீர்குலைத்து சிறப்பாக பந்து வீசுவதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி வாய்ப்பை எதிர் பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆடும் லெவன்:

ஹஸ்ரத்துல்லா ஸசாய், நூர் அலி சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாஹிடி, நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, இம்ரான் அலி கில் (WK), குல்படின் நைப் (C), ரஷீத் கான், அப்தாப் ஆலம் மற்றும் ஹமீத் ஹசன்.

Published 15 Jun 2019, 16:07 IST
Advertisement
Fetching more content...
App download animated image Get the free App now