ஆப்கானிஸ்தானின் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் 2019 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பதிலாக 18 வயதான இக்ரம் அலி ஹீல் சேர்க்கப்பட்டுள்ளார்.
முகமது ஷெஷாத்திற்கு பாகிஸ்தானிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முழங்காலில் காயம் ஏற்பட்டது. மோசமான விளைவுகளை தவிரக்க ஷெஷாத் அந்தப் போட்டியில் பாதியிலேயே ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அணி இவரது இந்த காயத்தை சமாளிக்கும் வகையில் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் களமிறக்கவில்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷெஷாத் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் இரு உலகக் கோப்பை போட்டிகளான, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். ஆனால் இந்த போட்டியில் அவர் விளையாடியதன் மூலம் ஷெஷாத்தின் காயம் மேலும் அதிகமானது.
ஆப்கானிஸ்தான் அணியின் ஓடிஐ வரலாற்றில் அதிக ரன்களை குவித்த முகமது ஷெஷாத்தின் காயத்தை கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையில் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. ஷெஷாத்தின் காயம் உலகக் கோப்பையில் மேலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியை பாதிக்காத வகையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அவரை நீக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் முன்னணி அதிரடி வீரராக அகமது ஷெஷாத் திகழ்கிறார். ஆப்கானிஸ்தானின் பேட்டிங் வரிசையில் அகமது ஷெஷாத் ஒரு முக்கிய வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் வலம் வருகிறார்.
ஆப்கானிஸ்தானின் இந்த சூழ்நிலையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளது. இக்ரம் ஹீல் அலியை இவருக்கு மாற்று வீரராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அலி ஹீல் ஆப்கானிஸ்தானின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். மார்ச் 2019 அன்று அயர்லாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் அறிமுகமானார். அத்துடன் 2017ல் நடந்த ஆசிய U19 கோப்பையில் ஆப்கானிஸ்தான் வென்று வரலாற்று சாதனை படைத்தது. அந்த அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். அலி ஹீல் பாகிஸ்தானிற்கு எதிரான இறுதிப் போட்டியில் சதம் விளாசி ஆப்கானிஸ்தானிற்கு முதல் U19 ஆசியக் கோப்பையை வென்று தந்தார். இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் அலி ஹீல் U19 உலகக் கோப்பை தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடினார். 2018ல் நடந்த அந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாவது மாற்று தொடக்க ஆட்டக்காரராக நூர் அலி ஜாட்ரான் உள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இவரை தொடக்க வீரராக களமிறக்குமா அல்லது பேட்டிங் வரிசையினை மாற்றி விடுமா என்பதனைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி இதற்கான தீர்வை உடனடியாக எடுக்க வேண்டும். ஏனெனில் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானின் பேட்டிங் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. அத்துடன் 2019 உலகக் கோப்பையில் பேட்டிங் என்பது மிக முக்கிய காரணியாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.